தன்னலம் பாராமல் உழைக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டியராஜன் குறித்து கமலஹாசனின்  ட்விட்டர் பதிவு நம்மை எல்லாம் நெகிழ  வைக்கின்றது.
கொரனா பீதி:
இந்த கொரோனா பீதியால் அனைவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் சமூக வேலைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அரசாங்க ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அதுமட்டுமில்லாமல் பல கடைக்கோடி ஊழியர்கள் அவர்கள் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் இந்த பணிக்கு சென்று வருகிறார்கள். இது போன்ற பணியில் ஈடுபடும் நபர்களின் குடும்பத்தினர் பெரும் அச்சத்திலேயே அவர்களின் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

ஆம்புலன்ஸ் டிரைவர்:
அந்தவகையில் ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரை என்பவரின் ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அவரது பெற்றோர் இந்த வேலையை விட்டு வரும்படி கூறியும் சுயநலம் பாராமல் தன்னலத்தை விட மக்களின் நலம் பெரிது என்று எண்ணி நான் வேலைக்கு செல்வேன் என்று கூறும் பாண்டி துறையின் வார்த்தைகள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கின்றன.

இவரைக் குறித்து உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் அவரது ட்விட்டர் பதிவில்,


108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள்.பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்?என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள். கடவுள்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கம்: திருமதி: செல்வபாரதி

Post a Comment

0 Comments