டெல்லி விமான நிலையத்தில் சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் குண்டுகள் கண்டுபிடிப்பு!

 நாட்டின் தலைநகரான  டெல்லியில்  பாதுகாப்பு நிறைந்த சூழலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து, மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டில்லி விமான நிலையத்தில் ஆர்டிஎக்எஸ் குண்டுகள் கொண்ட பையை வைத்தது யார் என்பது குறித்த தீவிர விசாரணைகள் மற்றும் கேமரா காட்சிகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.

டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 3வது டெர்மினலில் சந்தேகப்படும் படும் வகையில் பை ஒன்று இருந்தது. இதனை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பையை எடுத்து சோதனை நடத்தினர். அதில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சக்திவாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த பையை இங்கு வைத்தது யார், பாதுகாப்பு அதிகாரிகள் கண்களில் எவ்வாறு பட்டது என்பது தொடங்கி பெரும் பரப்பரப்பான நிலையில் சர்வேத விமான நிலையம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 


வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. பயணிகள் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மோப்பநாயகள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கப்படுகிறது.  ஏதேனும் தீவிரவாதிகள் சதியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பாதுகாப்பு வளையங்களை மீறி எவ்வாறு  குண்டுகள் கொண்ட பையானது வைக்கப்பட்து போன்ற விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments