தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வெய்யிலின் தாக்கத்தை குறைத்துள்ளது. சேலம் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. எடப்பாடி, கொங்கணாபுரம், சித்தூர், பூலாம்பட்டி உள்ளிட்ட சேலம் மாவட்டப்பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலத்தை தொடர்ந்து திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று பிற்பகலில் இருந்து தருமபுரி மாவட்டப் பகுதிகளான காளி பேட்டை, மஞ்சவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.
இன்றைய மழையால் வாக்களிக்க சென்றவர்கள் வாக்கு அளிக்க முடியாமல், வீடு திரும்பினார்கள். வாட்டி வதைத்த கோடை வெயிலில் இருந்து இன்று தப்பித்த மகிழ்ச்சியில் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்கள் உள்ளன.
கோவையில் மழை ஆரம்பமாகியது மற்றும் கன்னியாகுமரியில் பெய்த மழையால் ஓட்டுப்பதிவில் பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் மாலை 5 மணி முதல் காற்று வீசத் தொடங்கி மழை வரும் போக்கு காணப்பட்டது. மேலும் இரவு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மழையுடன் இடியானது உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.


0 Comments