கோடை மழையுடன் இந்திய பெருங்கடலில் புயல் வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது.நேற்று திருப்பூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.

தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது.  சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 அங்கிருந்து நகர்ந்து 28-ந்தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது. அதன்பின்னர், இலங்கை வழியாக தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமிபத்திய நிலவரப்படி அந்தப் புயல் தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது என்று வானிலை ஆய்வு யைம் தெரிவித்துளளது..

25-ந்தேதிக்கு தீவிர காற்றழுத்த நிலைப்பாடு குறித்து உறுதியாக சொல்ல முடியும், தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோடை வெய்யிலை தனித்த மழையானது புயலாகும் என்ற செய்தியானது மக்களிடையே அதிர்ச்சியை உண்டு செய்துள்ளது.


Post a Comment

0 Comments