ஹோலிப் பண்டிக்கை உற்சாகம் வண்ணமயமாகிய மக்கள்!

நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டுகின்றது. வடமாநிலங்களில் சட்டிஸ்கர், உத்திரப் பிரதேசம்,  குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத், முழுவதும் ஹோலிப்பண்டிகை சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. 

நாடு முழுவதும் இரண்டாவது நாளாக ஹோலியை மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அலிகார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நேற்று ஹோலியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். முஸ்லீம் மாணவர்களும் ஹோலியை கொண்டாட ஒற்றுமையுடன் கொண்டாடினார்கள்.



ஹோலிகா அரக்கியை எரிந்ததை நினைவுகூர்ந்து  சிதையை மூட்டி மக்கள் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ஹோலி நிகழ்வு நெகிழ்ச்சியை உண்டாக்கியது. ஹோலி வட மாநில மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். 

சென்னை சௌகார்பேட்டையில் ஹோலி பண்டிக்கை  கொண்டாட்டம் களைக்கட்டியது. இங்கு வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இங்குள்ள மக்கள் வண்ணப் பொடிகள் தூவி கோலகல கொண்டாட்டத்துடன் பூஜை செய்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

Post a Comment

0 Comments