பண்டிகை காலம் நெருங்கிவிட்டது வீட்டுக்கு புதுபுதுசாக பட்சணங்களான இனிப்பு, புதிய உடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான எலக்டிரானிக்ஸ் அப்ளைன்ஸ் என புதிதாக நிறைய வாங்கி போட பலர் ஆய்த்தமாக தொடங்கிவிட்டீர்கள் என நினைக்கின்றோம். இன்னும் தீபாவளிக்கு 15 நாட்கள் வீதம்தான் உள்ளன, கடை வீதிகள் நிறைந்து காணப்படும் உங்களுக்காக பண்டிக்கைகால ஷாப்பிங்கை சென்னை குடோன் ஸ்ட்ரீட்டில் செய்யலாம் வாங்க.
விதவிதமான கலெசன் பட்ஜெட்டில் அடங்கும் விலைகள் அத்துடன் வீதியெங்கும் கடைகள் நிறைந்தது சென்னையின் குடோன் ஸ்ட்ரீட் சென்னையின் பாரம்பரியமான பாரிஸ் கார்னரில் அமைந்துள்ளது இந்த குடோன் ஸ்ட்ரீட் இங்கு நமக்கு தேவையான எல்லா பொருட்களையும் சிறந்த முறையில் நல்ல விலையில் பெறலாம்.
சென்னை குடோன் ஸ்ட்ரீட்டில் சுடிதார், சேலைகள், குழந்தைகள் பிரிவு, ஆண்களுக்கான துணிகள் கொண்ட கடைகள், ஆடைகள் என ஒவ்வொரு ரகம் ஒவ்வொரு கடையில் இருக்கும் சேலைகள் எனில் சேலைகள் மட்டும் கொண்ட கடைகள் வரிசையாக காணலாம். அந்த தெருவில் எங்கு பிடித்தாலும் வாங்கி கொள்ளலாம். மேலும் இக்கடைகளில் மொத்தமாகவும் சில்லைரையாகவும் விருப்பத்திற்கேற்ப குறைவான விலையில் பெறலாம். மேலும் இங்கு வாங்கும் பொருட்கள் மிகவும் தரமானாத இருக்கும் குடோன் ஸ்ட்ரீட்டில் ரூபாய் 200 முதல் ரூபாய் 5000 மற்றும் 10,000 வரை எல்லா ரகங்களில் புடவைகள் பெறலாம்.
சேலைகளில் பிராண்ட் சாரிஸ் மற்றும் லோக்கல் ரகங்களும் விருப்பம் போல் கிடைக்கும் சாயம் போகாது மற்றும் வெழுத்து போகாமல் தரமானதாக நீண்ட நாட்களுக்கு உழைக்கும் தரம் வாய்ந்த சேலைகள் இங்கு கிடைக்க பெறலாம். நிறம் மங்குதல் மற்றும் சாயம் போதல் போன்ற சிக்கல்கள் சென்னை பிராட்வே கடைகளில் வாங்கும் துணிகளில் இருப்பத்தில்லை. மேலும் நாமும் கவனமாக வாங்க வேண்டியது அவசியமாகும்.
பெண்கள் குழுவாகவோ அல்லது குடும்பமாகவோ கலந்து வந்து வாங்கலாம். நிறைய புடவைகள் விரும்பும் அனைத்து ரகங்ககளிலும் அதிக சேலைகள் எடுக்கும் பொழுது குறைவான விலையில் பெறலாம்.
காட்டன், சில்க் காட்டன் போன்ற வெரைட்டி ரகங்களில் சேலைகள் எடுத்துகொள்ளலாம்.
சுடிதார்கள்:
சுடிதார்களுக்கென நிறைய கார்மெண்ட்ஸ்கள் உள்ளன. இங்கும் குறைவான விலை முதல் அதிக விலை வரை பெறலாம். அனைத்து ரகங்களிலும் பெறலாம். அனார்கலி, லாங் டாப், காட்டன் மற்றும் டெனிம் அத்துடன் லெகங்காக்கள்மற்றும் கோட் ரகங்கள், லெக்கின்ஸ், பேஷோ பேண்ட்கள் என அனைத்து ரகங்களிலும் கிடைக்கப் பெறலாம்.
லெகங்காக்கள் ரூபாய் 850 முதல் ரூபாய் 5000 வரை கிடைக்கும் எந்த விலையில் வோண்டுமோ அந்த விலைகளில் பிடித்ததை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குடோன் தெருவில் பல கடைகள் இருப்பதால் விலை குறைவாக மற்றும் எங்கு தரமாக கிடைக்கும் என சுற்றும் பார்த்து வாங்கி கொள்ளலாம்.
ஆண்களுக்கும் இதே தெருவில் தனித்தனியே கடைகள் இங்கு உள்ளது குடும்பமாக வந்து தேவையான அளவில் துணிகளை வாங்கலாம்.
கர்சீப்கள் மற்றும் இதர துணிகளின் கலெக்சன்கள் பிராட்வேயில் எடுத்து கொள்ளலாம். விலை கட்டுப்படியாகவும் தரமானதாகவுக் கிடைக்கப் பெறலாம்.
காலை 10 மணிக்கு பாரிசில் உங்கள் சாப்பிங்கை தொடங்கினால் மாலை 6 முதல் 7 மணி வரை தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்யலாம்.
0 Comments