விளம்பி மாதம் ஐப்பசி 7 ஆம் நாளான இன்று பௌர்ணமி மிகவும் விசேசமான நாட்கள் பொதுவாக அம்மாவாசையில் சிவனையும் பௌர்ணமியில் துர்கையையும் வணங்குவது வழக்கம்.
இன்று அக்டோபர் 24, 2018 இல் பௌர்ணமி ஐப்பசி மாதத்தில் சிவபெருமானுக்கு உகந்ததாக போற்றப்படுகின்றது இன்றைய நாள் மிகவும் சிறப்பானது ஆகையால் அனைவரும் நினைவில் கொண்டு சிவனை தர்சித்து வாருங்கள்.
அன்னாபிசேகம்:
இன்று சிவபெருமானுக்கு உகந்த நாள் அவருக்கு அண்ணாபிசேகம் இன்று நடத்தப்படும் ஆகையால் இந்த நாளினை சிறப்பாக அனைவரும் இறைவனை அண்ணாபிசேகத்துடன் தர்சித்து சொர்க்க பிராப்தி பெறுங்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
அண்ணாமலையானே போற்றி !
ஓம் நமச்சிவாய உலகையாளும் இனிய நாமம் மற்றும் இதய கீதம் என்ற வரிகளின் வடிவானவர்
எண்ணும் எண்ணத்திலும்
எழுதும் எழுத்திலும் உயிர்ப்பாய் இருப்பார்!
உண்ணும் அனைத்திலும் இருப்பார் ஆண்டவர்!
இந்நாளில் குடும்பத்துடன் சிவனின் அண்ணாபிசேக கோலத்தை தர்சித்து அங்கு வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி உண்ணவும் இது மிகவும் சிறப்பான நாளாகும். சிவன் அபிசேகப் பிரியர் ஆவார். இந்த நாளில் செய்யும் வழிப்பாட்டால் உணவு நிறைவாக கிடைக்கும் வரமும், உடல் ஆரோக்கியம், செல்வவளம் பெறலாம்.
இறைவன் சிவபெருமானின் சிவலிங்கத் திருமேனியை அன்னத்தினால் பச்சரிசி தோற்றத்தால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிசேகம் எங்கின்றோம்
திருமூலர்:
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
எங்கிறார் திருமூலர் நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயசம், காற்று, நெருப்பு,என்ற பஞ்ச பூதங்களால் ஆனது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பது போல் நமது உடல் ஐந்து பூதங்களால் ஆனது. பஞ்சப்பூதங்களை சிறப்பித்து அண்டத்திலுள்லோர் அனைவருக்கும் உணவும், நீரும் நிறைவாக கிடைக்க ஈசனை வணங்கி அவருக்கு அன்னாபிசேகம் செய்து வழிப்படும் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது.
அண்ணம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்று இந்த அண்ணாபிசேகம் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும். இந்த அபிசேகத்தில் உங்களையும் இணைத்து உங்களால் இயன்றதை அபிசேகத்துக்கு வழங்கவும்.
மாணவர்கள் படிப்பது மறந்து போவது போன்ற சிக்கல்கள் தீர்க்கும் இந்த அண்ணாபிசேகம்.
சிவ மந்திரம்:
பழமையான சிவன் கோவில்களில் சிவதரிசனம் செய்பவர்கள் எனில்
ஓம் ஆன் ஹ்வும் ச்வம் என்ற மந்திரத்தை உச்சரியுங்கள் உங்கள் 300 தலைமுறையாக வரும் அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும்.
ஓம் நமச்சிவாய உச்சரியுங்கள்
ஓம் சிவசிவ ஓம்
விரும்பிதை எல்லாம் நிறைவேற்றுவார் நமது சிவனார்.
0 Comments