இந்திய பொருளாதாரத்தின் மூன்று துறைகள் பற்றியும் அதன் மற்ற தகவல்களை பற்றியும் சிலேகுச்சி இந்தியா தேர்வர்களுக்கு தகவல்கள் தருகின்றது.
முதண்மைத் துறை:
வேளாண்மை, மீன்பிடித்தல், கால்நடை வளர்ப்பு, சுரங்கத் தொழிகள் முதலியன
இத்துறையின் மூலம் ஒட்டுமொத்தமாக உள்நாடு உற்பத்தியில் ஏறத்தாழ 17 சதவிகித வருவாய் கிடைக்கிறது. இத்துறையில் 49 சதவிகித மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
தொழிற் துறை:
பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இத்துறையின் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகித வருவாய் கிடைக்கிறது. இத்துறையில் 20 சதவிகித மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
சேவைத்துறை:
வணிகம், கட்டுமானம், மென் பொருள், தொலைத் தொடர்பு உள்ளிட்டவை இத்துறையின் மூலம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவிகித வருவாய் கிடைக்கிறது. இத்துறையின் 31 சதவிகித மக்கள் ஈட்டுப்பட்டுள்ளனர்.
இந்திய பொருளாதாரமானது அதீத வறுமை- குறைந்த தலா வருவாய்- அதிகமான மக்கள் தொகை- குறைவான உற்பத்தித்திறனுடைய வேளாண்மை -அதீத மக்கள் தொகை வளர்ச்சி- மூலதனப் பற்றாக்குறை ஆகியவற்றை கொண்டுள்ளதால் பின்தங்கிய பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 492.4 மில்லியன் பணியாளர் வளம் மக்கள் தொகையில் மூன்றாம் இரண்டு பங்கு இளைஞர்கள் பொருளாதார சீர்த்திருத்தங்கள் மற்றும் அபரிதமான இயற்கை வளம் ஆகியவற்றினைக் கொண்டுள்ளதால் சமீப காலமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வும் அதன் மூலம் தலாவருவாய் உயர்வும் ஏற்பட்டு வருகிறது. மேலும் வறுமையின் அளவும் வேகமாகக் குறைத்து வருகிறது இவை வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றழைக்கப்படுகிறது.
தாராளமயமாக்கலின் வழி நடத்தப்படுவதால் பணவீக்கம் ஏற்றுமதி குறைவு, தொழில் துறை சுணக்கம், உலகளவில் தேவை குறைவு போன்றவற்றால் அவ்வவ்போது பாதிப்புக்குள்ளாகி வரும் இந்தியப் பொருளாதாரம், இதர உலக நாடுகளின் பொருளாதாரங்களைப் போல் அபார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. உலக வங்கியில் அறிக்கைப்படி 2050 இல் சுமார் 163 கோடி மக்கள் தொகையையும் வாங்கும் திறன் டிரில்லியன் மதிப்புள்ள பொருளாதாரத்தையும் கொண்டு உலக அளவில் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய வளர்ச்சிக்குழு:
தேசிய வளர்ச்சிக்குழு ஆகஸ்ட் 1952 - ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டுத் திட்ட வரைவு அறிக்கையின் பரிந்துரையின்பேரில் உருவாக்கப்பட்டது.
இது அரசியலமைப்பாலோ அல்லது பாராளுமன்றச் சட்டத்தாலோ உருவாக்கப்படாமல், நிர்வாகத் துறையில் தீர்மானத்தின் போரில் உருவாக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் இதன் தலைவராகச் செயல்படுவார்.
மத்திய அரசின் அனைத்து கேபினெட் அமைச்சர்களுக்கும் இதில் இடம் பெறுவார்.
திட்டக்குழு உறுப்பினர்களும் இதில் பங்கு பெறுவர் தற்பொழுது அது நிதி அயோக் என உறுப்பினர்களாக உள்ளனர்.
திட்டக்குழுவின் செயலரே தேசிய வளர்ச்சி குழுவின் செயலராகவும் திகழ்வார். நிர்வாக உதவி மற்றும் ஏனைய உதவிகளையும் அவர் வழங்குவார் அவரே தற்பொழுதைய நிதி ஆயோக்கின் தலைமைச் செயலர் ஆக செயல்படுவார்.
குறிக்கோள்கள்:
திட்டங்கள் நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பெறுதல் தேசத்தின் வளம் மற்றும்முயற்சி ஆகியவற்றை திட்டத்திற்கு ஆதரவகத் திரட்டுதல் ஆகும்.
அனைத்து முக்கியமான துறைகளும் பொதுவான பொருளாதாரக் கொளகைகளை உருவாக்குதல் ஆகும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விரைவான மற்றும் சரிசமமான வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
மேலும் படிக்க:
குரூப் 2 தேர்வு குறித்து அறிய
குரூப் 2 தேர்வின் வினாத்தாள் கணிப்பு
குரூப் 2 தேர்வுக்கான புத்தக விவரங்கள் அறிய கிளிக் செய்ய
குரூப் 2 தேர்வுக்கான வினா- வங்கி படியுங்க
மேலும் படிக்க:
குரூப் 2 தேர்வு குறித்து அறிய
குரூப் 2 தேர்வின் வினாத்தாள் கணிப்பு
குரூப் 2 தேர்வுக்கான புத்தக விவரங்கள் அறிய கிளிக் செய்ய
குரூப் 2 தேர்வுக்கான வினா- வங்கி படியுங்க
0 Comments