மாணவர்களே
உங்களின் மனதில்
உறங்கி
கிடக்கும் என்னை எழுப்ப வேண்டியது
உங்கள் கடமை
நாட்டை
வளப்படுத்துங்கள் நன்முறையில் வளமுடன் வாழுங்கள்!
ராமேஸ்வரத்தில்
ரம்மியமான சூழலில் பிறந்து
பள்ளி
பருவத்திலே பாடுபட்டு உழைத்து படித்து
பாரததிற்காக
தன் வாழ்நாளை முழுவதும் பாதுகாப்பு தள வளர்ச்சியில் அர்ப்பணித்தவர்!
இயற்பியல்
படித்து ஏவுகணைகளை ஏவி
அமெரிக்கா
போன்ற வல்லரசு நாடுகளை எல்லாம்
வாய்பிளக்க வைத்தவர்!
கல்வி
உதவித்தொகையினை பெற காலநேரமின்றி உழைத்து
தன்னை
கட்டுக்கோப்பான மாணவர் என்பதை நிருபித்தார்!
பாதுகாப்பு
மையத்தில் தன் பணியை தொடங்கி
இந்திய
ராணுவத்திற்கு இனிதான ஹெலிகாப்டரை உருவாக்கினார்!
எஸ்எல்வி
ரோகினி, அக்னிகளின் ஆஸ்தான நாயகன்
அன்பும்
கனிவான உள்ளமும் கொண்டவர் கலாம்!
மாணவர்களின்
பிதாமகர் மதிப்புமிக்க ஞானி
மனித
தன்மையின் மருவுருமாக இருந்தவர்!
மரம் வளர்க்க மாணவர்களை உறுதி மொழி எடுக்கச் செய்தவர்!
தேசிய
பணியை தனது பணியாக்கி
இந்நாட்டு
இளைஞர்களினை வாரிசாக கொண்டு வாழ்ந்தவர்!
முகல்
கார்டனில் முன் பின்னும் காவல்
காத்து நின்ற காவலாளிகள் கடும்
குளிரை தாங்கவல்ல வசதியை கொடுத்தவர்
முயற்சியை
வளர்ச்சியையும் வாழ்வாதரமாக கொண்டு மாணவர்கள் வாழ
வேண்டுமென்ற விதையை விதைத்துச் சென்றவர்!
மதங்ககளுக்கு
அப்பாற்ப்பட்ட மகாத்மா மனமெல்லாம் சிலிர்த்து
நிற்கும் அக்னி சிறகுகளின் நாயகனை
நினைக்கும் பொழுது
இறுதியாக
நீங்கள் கேட்ட இனிதான அசைமெண்டை
நாங்கள் முடிக்க காத்து கொண்டிருக்கின்றோம்..
இந்திய
தேசத்தின் பார்லிமெண்டினை அமைதியாக நடத்தி இளைஞர்களை கொண்டு தேசத்தை
1931 ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் படகு சொந்தக்காரர்
மகனாக இந்திய தென் கோடியில்
பிறந்தவர். தந்தை ஜைனாலுபுதின் தாய்
ஆசியம்மாவின் அன்பும் பண்பும் கலந்து
கலவையாக வளர்ந்தவர். சிறுவயது முதல் பணியாற்றி படித்தவர்.
இயற்பியலில் பட்டம் பெற்று எம்ஐடி சென்னையில் விண்வெளி பொறியியல் படிப்பிற்காக சென்னை சென்றார்.
சென்னையில்
முதுகலை பட்டமும் புகழ்மிக்க முனைவர்கள் பட்டங்கள் பல பெற்றவர். கல்லூரிகளில்
கடினமாக உழைப்புடன் படித்தவர் ஓய்வில்லாமல் உழைத்தவர் அத்துடன் கொடுக்கப்பட்ட இலக்கினை சிறப்பாக செயலாற்றி அடைந்தவர்.
பாதுகாப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்
வானூர்த்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் 1960-இல் முதன்மை அறிவியலாளராக
சேர்ந்தவர். இந்திய ராணுவத்தின் ஒரு
சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்து பணியை சிறப்பாக தொடங்கினார். புகழ்பெற்ற
விண்வெளி ஆராய்ச்சி விக்ரம் சராபாயின் கீழ்
இயங்கி வந்த ஒரு குழுவின்
அங்கமாக இருந்து அவரின் பயிற்சியில்
சிறப்பாக செயல்பட்டு பெருமை சேர்த்தார். 1969-இல்
கலாம் அவர்கள் இந்திய விண்வெளி
ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்படு இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனத்தில் முதல் உள்நாட்டு செய்ற்கைக்கோள்
பாய்ச்சுதல் வாகனமான லாஞ்சரில் எஸ்எல்வி-3 திட்டத்தின் இயக்குநர் ஆனார்.
எஸ்எஸ்எல்வி
ரோகினி செய்ற்கைகோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980இல்
ஏவியது. கலாமின் வாழ்வியல் இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து மிகபெரிய சாதனைகளை செய்தார். 1969 இல் கலாம் அரசாங்கத்திடம்
அனுமதி பெற்று விரிவுபடுத்தக் கூடிய
வின்கலத்திட்டத்தில் தனித்து பணியாற்றித்துடன் பல
பொறியாளர்களை இணைத்துக் கொண்டார்.
1963 மற்றும்
1964 இல் நாசாஆராய்ச்சி மையங்களுக்கு சென்று வந்தார். 1970 மற்றும்
1990களில் கலாம் போலார் எஸ்எல்வி
மற்றும் எஸ்எல்வி-3 திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். நாட்டின்
முதல் அணு ஆயுத சோதனையாக
புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்கு
ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின்
பதிலியாக அழைக்கப்பட்டார்.
1970களில்
எஸ்.எல்.விகளில் கலாம்
வெற்றிகரமான எஸ்எல்வி திட்டத்தினை தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம்
மற்றும் வாலியன் செயல் திட்டம்
என்ற இரு திட்டங்களை இயக்கினார்.
மத்திய அமைச்சரவை மறுத்த போதிலும் இந்திராவால்
தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ்
இயக்கவுள்ள விண்வெளி திட்டத்திற்கு நிதியினை பெற்றார்.
நடுவண்
அரசின் இந்திய விண்வெளி திட்ட
உண்மையான தன்மையை மறைக்க செய்வதில்
தலைமைபங்கு வகித்து செயலாற்றி ஆராய்ச்சி
மற்றும் கல்வித் தலைமையில் பெரும்
மதிப்புமிக்கவராக கருதப்பட்டார்.
1980லளில்
கலாம் அவர்களை திட்டத்தில் கொண்ட
அன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த வெங்கட் ராமன்
ஆலோசனையின்படி ஒரே சமயத்தில் பல
ஏவுகணைகள் திட்டத்தை துவக்கியதில் முக்கிய பங்காற்றினார்.
அக்னி
மற்றும் இடைநிலைதூர ஏவுகணை, பிரித்வி தந்திரோபாய
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை மற்றும் பல உருவாக்கும்
திட்டங்களில் தலைமை பங்கு வகித்தார்.
மேலும் 1992 ஜூலை மாதம் முதல்
1999 டிசம்பர் மாதம் வரை இந்திய
அரசின் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு அமைப்பின்
செயலராகவும் பணியாற்றினார். இதற்கிடையில் பொக்ரான்-2 அணு ஆயுத சோதனையிலும்
மற்றும் தொழில்நுட்பத்திலும் பங்காற்றினார்.
1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜூவுடன் சேர்ந்து சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படும்படுத்தும் வகையில் கலாம் ராஜூ ஸ்டென்ட் என பெயரிடப்பட்டது. 2012இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக அப்துல்கலாம்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி கலாம் ராஜூடேப்லெட் என்று பெயரிடப்பட்டது.
குடியரசு தலைவர் பதவி:
1950 முதல் 2007 குடியரசு தான் மேற்கொண்ட பணிகள் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். சிறப்பான அவருடைய பொதுநலன் சார்ந்த செயல்கள் வழிகாட்டல்கள் தேசத்து இளைஞர்களுக்கு வழிகாட்டல்களாக இருந்தது. இந்திய குடியரசு தலைவராக அவர் பணியாற்றிய காலங்களில் லட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.
மாணவர்களின் பிதாமகர்:
மாணவர்களுக்கு வழிக்காட்டல்களும் அவர்களுக்கு லட்சியதினை கனவாக கொண்டு முன்னேற வைக்கும் திட்டங்களும் கற்றுத் தந்தார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களின் நாயகராக இருந்தார். மேலும் பொதுவிழாக்கள் காலத்தில் மாணவர்களுக்கு ஆக்கபூர்வமானதாக செயல்பாட்டிற்கு மிகுந்த ஆதரவுடன் இருந்தார். நமது சிலேட்குச்சி இந்தியா தளத்தின் எடிட்டரான புதுயுகபாரதி சோபனாவும் மாணவ பருவத்தில் திரு.அப்துல்கலாம் அவர்களின் வழிக்காட்டல்களில் வளர்ந்த மாணவிகளில் ஒருவராவார். மேலும் கலாம் அவர்களின் பிறந்த தினத்தில் கல்லுரி மாணவர்களை ஒன்றுதிரட்டி தேசத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச்செல்ல கல்லுரி மாணவிகளிடையே உறுதி மொழி பெற்று பிறந்த நாள் பரிசாக அவருக்கு அனுப்பி அதனை கல்லுரிக்கு மீண்டும் பெருமிதத்துடன் கலாம் அவர்கள் அங்கிகரித்து அனுப்பினார்கள்.
நாட்டில் இளைஞர்களுக்கு பெரிய வழிக்காட்டல்களாகவும் மேலும் ஒரு உந்துசக்தியாகவும் இருந்தார். கிராம மற்றும் நகர இளைஞரிடையேயுள்ள இடைவெளியினை குறைக்க அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கு கிடைக்க புரா திட்டத்தினை தொடங்கினார். பதமபூஷன், பாரத ரத்னா விருதுகள் பல விருதுகள் பெற்றவர் 2015இல் ஜூலை 27 இல் மேலாயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவத்தில் மாணவரக்ளிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மயங்கி விழுந்தார். சிகிச்சை பலனின்றி மண்ணுலவைவிட்டு விண்ணுலகிற்கு பயணித்தார்.
நாட்டு மக்களிடையே எந்த வித பாகுபாடுமின்றி அனைத்து தரப்பு மக்களால் மதித்து போற்றப்பட்டார். அனைத்து தரப்பு மக்களுக்கும் மதிப்பு உலக நாடுகளில் பயணித்து தமிழில் சிறப்புரையாற்றி தமிழ் மொழிக்கு கௌரவம் சேர்த்தார்.
அப்துல்கலாம் அவர்கள் இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்கவைப்பது உங்கள் கையில் உள்ளது .
கனவு கானுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் கான்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே லட்சிய கனவாகும்.
அழகைப் பற்றி கனவு காணாதீர்ள் அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
இவ்வாறு பலவேறு ஊக்க வார்த்தைகளை கொண்டு மாணவர்களை உர்ச்சாகப்படுத்துதலில் எப்பொழுதும் ஆர்வமுடன் ஈடுபடுவார். மானவர்களுக்கு தான் கடந்துவந்த பாதையை அக்னி சிறகுகள் என்ற தலைப்பில் எழுதி சமர்பித்து மாணவர்களிடையே எழுச்சி தீயை ஏற்றி வைத்தார்.
தேசிய வளர்ச்சிக்கு மாணவர்கள் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற 2020 இல் புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்க்காக ஒரு பார்வையை எஸ்.ராஜனுடன் இணைந்து எழுதினார்கள்.
மிசன் இந்தியா ஏபிஜே அப்துல்கலாம் மானவ் குப்தா மூலம் ஓவியங்கள், பெங்குயின் புக்ஸ் மூலம் 2005 எழுதினார்கள்
தேசியத்தை ஊக்குவிக்கும் இன்ஸ்பைரிங் யோசனைகள் ராஜ்பால் மற்றும் சன்ஸ் 2007 ஆகும்.
அப்துல்கலாம் புத்தகங்களின் கருத்துகள் தேசத்தை தொலைநோக்கு பார்வையில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். இன்று அக்டோபர் 15 அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று அவரின் சாதனைகளையும் நாட்டு முன்னேற்றத்திற்கு இளைஞர்களை முன்னிருத்தி சென்றதில் அவருக்கு முக்கிய பங்குண்டு.
மேலும் படிக்க:
சமுகத்தின் நாயகர்கள்
சமுகத்தின் நாயகர்கள்
0 Comments