பண்டிகை கால மொபைல் சந்தை

பண்டிகை காலம் வந்துவிட்டது கலக்கலான திட்டங்களை நம்மிடையே நிறைய வைத்திருப்போம். சந்தையில் வருகை தந்துள்ள புதிய  மொபைல் போன்களைப் வாங்க நிறைய திட்டமிருக்கும். அதுவும் பட்ஜெட் விலை என்றால் மனதில் பல்பு எரியும் அந்த வகையில் சந்தையில் வருகை புரிந்துள்ள முக்கிய ரகங்களை அறிந்து கொள்வோ. வாங்க..



உங்கள் பட்ஜெட் விலையில் சிறந்த தரமான டிஸ்பிளேயுடன் வரும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் கிழே கொடுத்துள்ளோம். அதனைப் பின்பற்றி  விருப்பான தேர்வை உறுதி செய்யவும். 

1. நோக்கியா 6.1 பிளஸ்
- 5.8 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய பாதுகாப்பான 2.5டி கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 636 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 400ஜிபி வரை விரிவாக்கச் சேமிப்பு வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம்
- 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 16 மெகா பிக்சல் செல்பி கேமரா
- 3060 எம்.ஏ.எச் பேட்டரி 
விலை: ரூ.15,999

2. சியோமி ரெட்மி 6 ப்ரோ
சியோமி நிறுவனம் அண்மையில் தனது புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ நாட்ச் டிஸ்பிளே மாடல் ஸ்மார்ட்போன் ஐ இந்திய சந்தியில் அறிமுகம் செய்தது.
- 5.8 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட்
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு / 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு என இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.
- MIUI 9.6 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்
- 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 5 மெகா பிக்சல் பிரண்ட் ஷூட்டர் செல்பி கேமரா
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.10,999

3. ரியல்மி 2 
- 6.2 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 450 சிப்செட்
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு / 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு என இரண்டு வேரியண்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.
- கலர் ஓ.எஸ் 5.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
- 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 8 மெகா பிக்சல் பிரண்ட் ஷூட்டர் செல்பி கேமரா
- 4230 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ.8,990

4. ஹவாய் பி20 லைட்
- 6.3 இன்ச் முழு எச்டி பிளஸ் 19:9 நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 2.5டி கர்வுட் கிளாஸ் வடிவமைப்பு
- ஹேசிலிகோன் கிரீன் 659 சிப்செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256ஜிபி வரை விரிவாக்கச் சேமிப்பு வசதி
- EMUI 8.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்
- 16 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் டூயல் பின் கேமரா
- 24 மெகா பிக்சல் செல்பி கேமரா
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: 20,999 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹாவாய் மாடல்  இன்னும் இந்திய சந்தைகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. தகவல்களை பண்டிகைகால சலுகை விலைகளை பயன்படுத்தி பெறவும். 
WRITTEN BY YOUTH ICON  OF SLATEKUCHI INDIA: MANIKANDAN

Post a Comment

0 Comments