இந்திய அளவில் மிகபெரிய கௌரவமாக தன்னலமற்ற துறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய துறைகளில் ஒன்று இந்திய பாதுகாப்புத் துறை. இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய துறைகளான ராணுவம், இந்திய தரைப்படை, கப்பல்ப்படை போன்ற முப்படைகளில் பணியாற்ற விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகளும், வழிகாட்டலும் மிக அவசியம் ஆகும்.
பாதுகாப்புத் துறையில் பணியாற்ற கனவுகளுடன் வாழும் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்ட டெலிகிராம் ஆப்பில் வழிக்காட்டல் வழங்க இளைஞர்கள் குழு இலவச சேவை செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப் படை அத்துடன் கப்பல்படையில் பணியாற்ற விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசால் யூபிஎஸ்சியினால் நடத்தப்படும் சிடிஎஸ், மற்றும் என்டிஏ போன்ற தேர்வுக்கும் அடுத்து எஸ்எஸ்பி ஐந்து நாள் நேரடி தேர்வை எதிர்கொள்ள வழிக்காட்ட கைபேசியில் டெலிகிராம் குழு தமிழகத்து இளைஞர்கள் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.
அக்குழுவினை லிங்கினை https://t.me/defenceindia கொடுத்துள்ளோம் அதனைப் பின்பற்றி படித்து இந்திய ராணுவத்தில் பணிவாய்ப்பு தேர்வினை வெல்லுங்கள். தேசத்திற்கும் மக்களுக்கும் காவலானாய் இருந்து தாய்மண்னை கௌரவித்து சிறந்த சேவையாற்ற துடிக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
இந்திய ராணுவத்தில் பணியாற்ற மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்கும் மத்திய ஆட்சிப் பணி ஆணையம் நடத்தும் தேர்வினை 16 வயது முதல் 21 வயதுள்ளோர் வரை எழுதலாம். மேலும் பட்டதாரிகள் எழுத சிடிஎஸ் மற்றும் எண்டிஏ தேர்வுகள் வருடத்தில் இருமுறை இரண்டு தேர்வுகளும் நடத்தப்படும். அவற்றில் தேர்ச்சி பெறுவோர்கள் எஸ்எஸ்பி எனப்படு ஸ்டாப் செலக்சன் கமிஷனால் ஐந்து நாள் நடத்தப்படும் நேரடிதேர்வை எதிர்கொண்டு தேர்வை வெல்வோர் இந்திய ராணுவ அகடமி, அல்லது சென்னை ஓடிஏ, வெலிங்கடன் போன்ற அறிவிக்கப்படும் இடங்களில் பயிற்சி பெறுவார்கள்.
என்டிஏ, சிடிஎஸ் தேர்வுகள் மூலம் நாட்டின் பாதுகாப்பு துறைக்கு டெக்னிக்கல் மற்றும் நான் டெக்னிக்கல் இருபிரிவிலும் ஆட்கள் தேவைக்கு ஏற்ப தகுதியுடையோர் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
யூபிஎஸ்சியால் நடத்தப்படும் இந்த தேர்வானது ஆப்ஸ் எனப்படும் கணிதம் மற்றும் ஆங்கிலம், திறனாய்வு, முடிவெடுக்கும் திறன் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகளை கொண்டிருக்கும். தேர்வுக்கு படிக்கும் அதே நேரத்தில் உடற் தகுதியை வளப்படுத்தி ஐந்து நாள் எஸ்எஸ்பி இண்டர்வியூவினை வெல்லலாம்.
இந்திய பாதுகாப்பு படைகளில் பணியாற்ற வட மாநிலங்களில் கிடைக்கும் சிறப்பான வழிக்காட்டல்கள் தமிழத்தில் கிடைக்கப் பெறுவதில்லை ஆகையால் இது குறித்து தேவையான தகவல்களை வழங்கவும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொடுக்கப்பட்டுள்ள லிங்கினைப் பின்ப்பற்றி மாணவர்கள் தங்கள் கனவை நினைவாக்க இணையுங்கள்.
மேலும் படிக்க:
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
0 Comments