டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வினை வெல்ல பொருளாதார குறிப்புக்கள் படியுங்க!

குரூப் 2 தேர்வுக்கான பொது அறிவுப் பகுதியில்  முக்கிய பங்கு வகிக்கும் நாம் புரிந்து படிக்க வேண்டிய பொருளாதாரப் பகுதிகளின் ஹைலைட்ஸ் நோட்ஸ் இங்கு கொடுத்துள்ளோம். அதனை முழுமையாக பின்பற்றி படிக்கவும் தேர்வை வெல்லவும்.


நாட்டு வருமானம்: 
நாட்டு வருமானம் என்பது ஒர் நாட்டில், ஓர் ஆண்டில் உற்பத்தியாகும் எல்லாப் பண்டங்கள்  மற்றும் பணிகளின் வளர்ச்சியானது  தரம், கூலி, வட்டி, இலாப, போன்ற காரணிகளால் வருமானங்கள் சம அளவில் மாற்றமடையச் செய்கின்றன. 

முதல் வகை மாற்றம்: வருமான ஓட்டத்தின் சமஅளவு கால ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெறுவது முதல் வகை மாற்றம் ஆகும். 

இரண்டாம் வகை: நாட்டின் பொருளாதார வளர்ச்சி பண்டங்கள் வளர்ச்சி பண்டங்கள் பணிகள் உற்பத்தி கூட்டுருவாக்கம் மற்றும் பொருளாதார அடிப்படை நிலைக்கு ஏற்ற வகையில் மாற்றம் பெறுகின்றன. இம்மாற்றங்களினால் நாட்டு வருமானத்தில் வேளாண் பங்கி குறைக்கப்பட்டு தொழில் மற்றும் பணி ஆகியவற்றின் பிரிவுகளில் சிறப்பட்த்தை மிகுவிக்கின்றன. 

ஆல்பிரடு மார்சல்:
ஒரு நாட்டின் உழைப்பும், முதலும் அந்நாட்டின் வளங்களுடன் கூடிய ஓர் ஆண்டு காலத்தில் உற்ப்பத்தி செய்யப்படும் பண்டங்கள்  மற்றும் அனைத்து வகையான பணிகள் ஆகியவற்றின் மொத்த நிகர மதிப்பு வெளிநாட்டில் கிகைக்கும் வணிகத்துறைக்கான நிகர வருமானம் சேர்ந்தது. 

உண்மையான நிகர ஆண்டு வருமானம் அல்லது நாட்டு வருமானம் அல்லது நாடு வருமானம் ஈவு எனப்படுகிறது.

 மொத்த உள்நாடு உற்பத்தி: 
ஒரு நாட்டுஇஒன் எல்லைப் பரப்புக்குள்  ஒரு கணக்கீட்டு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பிலிருந்து தேய்மான மதிப்பை நீக்கியபின் கிடைக்கப் பெறும் பணமதிப்பாகும். 

நிகர உள்நாட்டு உற்பத்தி: 
ஒரு நாட்டின் எல்லைப் பரப்புக்குள் ஒரு கணக்கீட்டு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் பணிகளின் மதிப்புலிருந்து தேய்மான மதிப்பை நீக்கியப்பின் கிடைக்க பெறும் பணமதிப்பாகும். 

மொத்த உள்நாட்டு  உற்பத்தி: 
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படட் அனைத்துப் பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி விலையில் அளவிடப்படும் மொத்த மதிப்பு ஆகும். 

நிகர நாடு உற்பத்தி: 
ஓர் ஆண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்கள் பணிகளின் மதிப்பிலிருந்து தேய்மான மதிப்பை நீக்கியப்  பிறகு  கிடைக்கும்  பணமதிப்பாகும். 

தலா வருமானம்: 
ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் தனி ஒருவரின் சராசரி வருமானத்தை தலா வருமானம் என்கின்றோம். ஓர் ஆண்டில் நாட்டு வருமானத்தை ஆந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைக்கும் ஈவு நாட்டின் தலா வருமானம் ஆகும். 

நாட்டு வருமானத்தை  அளவிடும் முறைகள்: 
நாட்டு வருமானம் என்பது உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மொத்த மதிப்பையோ உற்பத்திக் காரணிகள்  பெறுகின்ற வருமானத்தை  மக்கள் உற்பத்தி பண்டங்களுக்கு செய்யும் செலவினையோ குறிப்பதாகும். 

நாட்டு வருமானத்தை மூன்று முறைகளில் அளவிடலாம். உற்பத்தி முறை, வருமான முறை, செலவின முறை ஆகும். 

இந்தியாவின் தேசிய வருமானக் கணக்கீட்டு வரிசைகள்: 
மரபு வரிசை: 
மரபு வரிசையானது 1948 -1949  முதல் 1964- 1965 வரையிலான காலத்தில் இந்திய நாட்டு  வருமானத்தை நடப்பு விலையில்  1948- 1948 இல் விலையிலும் கணக்கீடு இல் உள்ள விலை கணக்கீடு செய்யப்பட்டது.
திருத்த்தியமைக்கப்பட்ட வரிசை: 
திருத்தியமைக்கப்பட்ட வரிசையின் படி இந்திய நாட்டின் வருமானம் 1960- 1961 முதல் 1975-1976 வரையிலான  ஆண்டுகளில் நடப்பு விலையிலும் 1960 -1061 ஆம் ஆண்டு விலையிலும் கணக்கீடு  செய்யப்பட்டது. 

புதிய வரிசை: 
1960-1961 ஆம் ஆண்டு  விலைக்கு பதிலாக 1970 -1971 ஆம் ஆண்டு விலைகளை அடிப்படையாக கொண்டு நாட்டு வருமானம் கணக்கிடப்பட்டது.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments