இன்றோடு 72வது சுதந்திர தின ஆண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாடு குருகுல கல்வியிலிருந்து டிஜிட்டல் கல்வி வரை வளர்ந்து விட்டது. பல்வேறு இந்திய துறைகளின் வளர்ச்சி ஹிமாலய உயரம் அளவிற்கு சென்று கொண்டிருக்கின்றது. இருப்பினும் இவ்வளவு வளர்ச்சியிலும் இன்னும் சமுகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பில் குறிப்பிடத்தகுந்த அளவில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதுதனை இங்கு குறிப்பிட பட வேண்டிய ஒன்று.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பெண்களின் பாதுகாப்பில் அச்சுறுத்தலாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் என்னும் செய்தியை படிக்கும் பொழுது எங்கே எதை நோக்கி இந்த தேசம் பயணிக்கின்றது என்ற அச்சத்துடன் மனதில் கேள்வியும் எழுகின்றது.
இந்திய நாடு, 'தாய் நாடு' என அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் ஓடும் நதிகளுக்கெல்லாம் பெண்களின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் சரிசமம் என இறை வழிபாடுகளிலும் பெண்களுக்கு சமத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெண்ணுக்கான முன்னேற்ற பாதைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு அவளின் பாதுகாப்பிற்க்கும் இந்திய மண்ணில் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதைனை சமீப காலத்தில் நாம் செய்திகளாக படித்து பார்த்து வருகின்றோம்.
பெண்கள் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என எழுச்சி பேசும் இந்திய நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொடுமைகளின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்த தேததில் ஒரு பெண் இன்னும் தனிமையில் வாழ்வது தவறாகவும், தவறாக சித்தரிப்பதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன. இதனை தவிர்க்கவும் பெண்களை பாதுகாக்க இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் என்பது அவசியமாகும்.
விழிப்புணர்வு:
இந்திய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காவல் துறை முதல் கடை நிலைத்துறை வரையுள்ளது. அது குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கும் தவறு செய்தால் காலம் தாழ்த்தாமல் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு மனதைரியம் இருக்க வேண்டும். ஆண்களின் போக்கு அவர்களின் பார்வை அவர்களின் பேச்சில் இருக்க வேண்டிய கண்ணியம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். மேலும் தங்களை தாங்களே பாதுகொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு பெண்களிடம் பழகு வேண்டிய முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் பெண்களுக்கு இருக்கும் அதே கண்காணிப்பு ஆண்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். பெண்ணை தாயாக, தங்கையாக, அக்காவாக, நட்பாக சக உயிரினமாக மதித்து நடக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்:
ஊடகத்துறைக்கு ஒரு வேண்டுகோள் பெண்ணை போக பொருளாக காட்டும் பழக்கங்களை நிறுத்துங்கள் உங்கள் பண போதைக்கு மக்களை திசை திருப்ப வேண்டாம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஊடகம் நான்காவது தூணாக இருந்து தேசத்தை காக்க வேண்டும் என்ற பொருப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
சமூக ஊடகங்கள்:
சமூக ஊடகங்களில் ஆண்களும் பெண்களும் அத்து மீறி பழகுவதும் பெண்கள் சீரழிக்கப்பட ஒரு காரணமாகின்றது. புத்திசாலித்தனமாக செயல்படுவதாக ஆண்களும், பெண்களும் சமூக ஊடகங்களால் மதிகெட்டு திரிகின்ற சூழலும் மன உழைச்சலும் ஏற்பட சமூக ஊடகங்கள் முக்கிய காரணமாகின்றன. இது தவறான போக்கு சமூக ஊடகங்களில் பெண்களின் பெயர்களில் தொடங்கப்படும் கணக்குகளில் கட்டுக்கடங்காத ஆண்களின் நட்பு அழைப்புகள் வருவதும் வஞ்சக வலைகளில் விழுகிறோம் என அறியாமல் சில பெண்கள் சீரழிக்கப்படுவதும் அதிகரித்து காணப்படுகின்றது மதிகெட்டு சமூக ஊடக மதத்தால் பலர் பாதிக்கப்படுகின்றன.
தொலை தொடர்பு கண்டுபிடிப்புகள் அனைத்தும் தொலைந்து போக வைக்கின்ற அளவுக்கு கட்டுப்பாடின்றி செயல்படும் போக்கு நாட்டின் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் ஆகும் அரசு இது குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
கட்டுப்படுத்தப்பட வேண்டிய திரைத்துறை:
வர்த்தக நோக்கோடு இன்றைய சினிமாக்கள் செயல்படுகின்றன. பெண்களை போக பொருளாக, காட்சி பிண்டமாக காட்டி எதுவும் தவறில்லை எனும் போக்கில் செயல்படுகின்றனர். இது அடுத்து வரும் தலைமுறைகளையும் பாதிக்கும். இந்தியா போன்ற நாடுகளில் கண்னை கவரும் வகையில் பெண்களின் அழகை காட்டுகிறோம் என அங்கங்களை காட்டுகின்றன. அலட்சியமான போக்கை நிச்சயம் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையெனில் இன்றைய அவல நிலை நம்மை பெருமளவில் சீரழித்துவிடும் என்ற எச்சரிக்கையை சிலேட் குச்சி தளம் வாயிலாக தெரிவித்து கொள்கின்றோம்.
பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்:
அறிவையும் ஆளுமையும் வளர்ப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் ஆடை குறைப்பில் நமது முன்னேற்றம் என்பதில்லை. ஆகையால் அதனை உணர்ந்து நமது வளர்ச்சியை நாம் உறுதி செய்ய வேண்டும். பெண்களின் உரிமை என்பது வளர்ச்சியை உறுதிப்படுத்துதாக இருக்க வேண்டும். உறுதி தன்மையுடன் செயலில் வேகம் இருந்தால் போதுமானது ஆகும். இன்னும் இந்தியாவில் சமூக கட்டமைப்புகள் பழமையோடு பின்னப்பட்டே இருக்கின்றன. எனபதை நினைவில் வைத்து பெண்கள் நடந்து கொண்டால் எல்லாம் நன்மையாக முடியும்.
0 Comments