ஆகஸ்ட் 15,2018, 72வது சுதந்திரதினம் இன்று!

இந்தியா விடுதலையடைந்து 72 ஆண்டுகள் கடந்துவிட்டோம்.  இன்று ஆகஸ்ட் 15, 2018

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா :
சும்மா  கிடைக்க சுதந்திரம் சுக்கோ மிளகோ இல்லை.  கோட்டு சூட்டுப் போட்டு தட்டு நிறைய லட்டு கொடுத்து பெறப்பட்டதல்ல  இந்திய சுதந்திரம். 
பேஸ் புக்கிலே போராட்டம் நடத்தி  மீம்ஸ் போட்டு பெற்றதல்ல சுதந்திரம். இன்ஸ்டிராகிராமில் கூட்டம் கூட்டமாக செல்பியில்  சொகுசாக பெற்றதல்ல இந்திய சுதந்திரம் . 



இந்திய  வரலாற்றை  புரட்டி பாருங்கள் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திர யுத்தமொன்று நடத்தி அகிம்சா  போராட்டம் ஒரு பக்கம். 

சுதந்திரந்தை கொடுங்கள் ரத்ததை  கொடுக்கின்றேன் என்ற ராஷ்பிகாரி, சுபாஷ் சந்திர போஸ்  வழிநடத்திய  ஐஎன்ஏவின் ராணுவ படை  ஒரு பக்கம். 

இன்குலாப்  ஜிந்தாபாத்  என   இந்திய இளைஞர் பகத்சிங், சந்திர சேகர் ஆசாத், 
அச்சமில்லை, அச்சமில்லை என பாரதியார் மற்றும் கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமணிய சிவா, வாஞ்சி  நாதன் போன்ற ஆயிரக்கணக்கான போராட்டங்கள் இந்தியா மற்றும் வெளி நாட்டில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற நடைபெற்றன. 

காந்தியின்  கைத்தடியும்,சுபாஷின் ஜெய் ஹிந்த், பகத் சிங்கின் போரட்டங்கள் எல்லாம் ஆங்கிலேயர்களை வலிமை இழக்கச் செய்து  இந்தியாவை வெற்றியடையச் செய்தது. 

இந்தியா- பாகிஸ்தான்: 
 இந்தியா பாகிஸ்தான் என பிரிந்து இரு நாடுகளாயின. மேலும்   இந்திய பகுதிகள் இனம், மதம்,  மொழி, நிறம் வேற்றுமைகளைக் கடந்து இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பெயர் என இன்றும் ஒற்றுமை காத்து வருகின்றோம். 

சுதந்திரம் பேணி காப்போம்:
 சுதந்திரத்தை பேணி காப்போம் 71 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி உலக அரங்கில் நாம் அடைந்திருக்கின்ற உச்சம்  இந்தியன் என்று என்னை பெருமை அடையச் செய்கின்றது.

இந்திய தலைவர்கள்:
இந்நாளில் காமராசர், காந்தி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரம், செண்பக  ராமன் என இந்தியாவின் தென் கோடி  முதல் இமய மலை வரை ஒவ்வொரு மாநிலத்தில வாரியாக போராடிய அனைத்து தலைவர்களும் காந்திக்கும் சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்றோர்க்கு நிகரானவர்கள். அனைத்து மாநிலங்களிலும் போராடிய அனைத்து பகுதி விடுதலை  போராட்ட தலைவர்களுக்கும்  இந்நாளில் நன்றியுடன் கலந்த வணக்கம் சிலேட் குச்சி தெரிவித்து கொள்கின்றது. 

இந்திய பாதுகாப்பு படை: 
தன் குடும்பம்  வீடு என பாராமல் நாட்டையே வீடாய் கருதி நாட்டை காக்கும் இந்திய முப்படை பாதுகாப்பு வீரர்களுக்கும் தலை  வணங்கி எந்நாளும் எப்பொழுதும் உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் சிலேட் குச்சி பெருமைப் படுகின்றது.


விவசாயம்: 
இந்திய விவசாயம் செழிக்க வேண்டும் விவசாயிகள் வளம் கொழித்து மக்கள் ஆரோக்கியம் காக்கப்பட  வேண்டும். விவசாயிகளின் இடையூறுகள் அனைத்தும் போக்கப்படும் என்னும் நம்பிக்கையுடன் சிலேட் குச்சி  பசியை போக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


துப்புறவாளர்கள்:
100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட தேசம் ஆயிரத்தெட்டு சிக்கல்  ஆங்காங்கே அசுத்தம் ஆனாலும்  பாரபட்சம் பாராமல் தன்னை அழுக்காக்கி  ஊரையும் நாட்டையும் சுத்தம் செய்து  நோய் நொடியின்றி காக்க  பணியாற்றும் நாட்டிலுள்ள துப்புரவாளருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். 

இஸ்ரோ:
நாட்டின் வளர்ச்சியை தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கிணைகயாக நம்மை வளரச் செய்து கொண்டு ஓயாது உழைக்கும் இஸ்ரோவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

தொழிலாளர்கள்:
தொழிற்சாலைகளில் கனிம வளங்களை பெற்று தரும் சுரங்க உழைப்பாளிகள், உலக நாடுகளுக்கினையாக நம்மை கொண்டு செல்லும் தொழில் நிறுவனங்களுக்கும். ஒருக்கொருவர் உதவி செய்து பாதுகாக்கும்  ஆதரவற்ற இல்லங்களுக்கு அங்குள்ள இந்திய குழந்தைகளுக்கும் நன்றிகளுடன் வாழ்த்துக்கள். 

பெண்கள்:
இந்நாளில் பெண்களின் முன்னேற்றமும் அவர்களை காத்து நாம் முன்னெடுத்து செல்ல நாம்  நிறைய கற்றுக் கொடுத்து பெண்ணை அறிவாய் நோக்கி  அவளுக்கு பாதுகாப்பு கொடுப்போம். 

மேலும்   நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும், அயராது உழைத்து பாதுக்காக்கும் பெற்றோர்கள், தேசத்தின் பெருமையை உலக அளவில் கொண்டு பெருமை சேர்க்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள், நாளைய இந்திய தூண்களான இந்திய மாணவ மாணவிகள்  மற்றும் இளைஞர்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களுடன் நன்றி!

வாழ்க பாரதம் வளர்க என் தாய திருநாடு வந்தே மாதரம்! ஜெய்ஹிந்!

Post a Comment

0 Comments