தனிநபர் துப்பாக்கி சுடும் பிரிவில் மேலும் ஒரு தங்கம் வென்ற இந்தியாவின் பெண் சிங்கம்!

18வது ஆசிய ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு தங்க வேட்டை தனிஆளாக ராகிசரனோபட்  துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனி நபர் துப்பாக்கி சுடுதல் 25 மீ பிஸ்டல் பிரிவில்  போட்டியில்  சிங்கம் சிங்கிளா அடிக்கும் என சாதித்துள்ளார்.


இறுதி போட்டி இந்தியாவின் இரண்டு பேர்:
இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர்  துப்பாக்கி சுடுதல் 25மீ பிஸ்டல் பிரிவில் 580 புள்ளிகள் பெற்று ராகி சர்னோபட் பைனலுக்குள் நுழைந்தார்.
மனுபாகர்:
மேலும் மற்றோரு வீராங்கணையான 16-வயது மனுபாகர் 593 புள்ளிகளுடன் பைனல் நுழைந்தார். ஆனாலும் மனுபாகர் 6 வது இடமே பிடித்தார். வாழ்த்துக்கள் மனுபாகர்  நிச்சயம் அடுத்து முறை வெற்றி பெறலாம். சிறுவயதிலே இந்த பங்கேற்பு பெருமிதச் செய்கின்றது.

ராகிசர்னோபட் சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்துடன் செயல்பட்டு முதலிடத்தை கைப்பற்றினார். ராகி சர்னோபட் தாய்லாந்து வீராங்கணை நப்ஹாஸ்வன் இருவரும் சமப்புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர். இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்கும் டைபிரேக் செய்ய ஷூட் அவுட் முறையில் தாய்லாந்து வீராங்கணைக்கும் ராகிக்கும் நடைபெற்றது. இந்த முறை சுதாரித்து புத்திசாலிதனத்துடன் விளையாடிய ராகி சர்னோபட் தாய்லாந்து நாட்டின் நப்ஹாஸ்வனை 2 சூட்  முந்தி 3 சூட் பெற்று முதலிடம் பிடித்தார். தங்க பதக்கத்தை இந்தியாவுக்கு சொந்தமாக்கினார்.

 நான்காவது தங்கம்: 
இந்தியாவின் சர்னோபட் தங்கத்துடன் இந்தியா மொத்தம் 4 பதக்கங்களை பெற்றுள்ளது. மல்யுத்தத்தில் 2 தங்கமும், துப்பாக்கி சுதலில் 2 தங்கம் என மொத்தம் 4 பெற்றுள்ளது. 

பெருமிதக்கச் செய்யும் வீர்ர்கள் மெய்சிலிர்க்கின்றோம் உங்களது வெற்றியில், தொடர்ந்து நீங்கள் வென்று தேசியத்திற்கு பெருமை சேர்க்க என்றும் உங்களுடன் பக்கபலமாக நாங்கள் இந்தியர்கள் மற்றும் சிலேட்குச்சி உடன் இருக்கின்றோம். வெல்க இந்தியா!...

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments