இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றி! ரோகித் சர்மா சதம்!

குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு  மற்றும் ரோகித் சர்மாவின் அற்புத சதம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. 
நாட்டிங்கம் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் இங்கிலாந்து அணி 7.4 ஓவர் 50 ரன்களை கடந்தது.
 கலக்கல்  குல்தீப் யாதவ்:
இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடி வந்த ஜேசன் ராய் (38) குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். குல்தீப் யாதவின் இரண்டாவது ஓவரில் ஜோ ரூட் (3) வந்த வேகத்தில் நடையை கட்டினார். அதே ஓவரில் ஜான்னி பேர்ஸ்டோ  (38) ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அணியின் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அணியின் ஸ்கோர் 105 ரன்களை எட்டிய நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் (19) ரன்களுக்கு ஒய் சாலால் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாப்ஸ் பட்லர் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருபுறம் ஜாப்ஸ் பட்லர்  அதிரடியாக விளையாட மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடினார். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர்  அரைசதம் அடித்த நிலையில் (53) ரன்களுக்கு தனது விக்கெட்டை குல்தீப் யாதவ் இடம் பறிகொடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ்  ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் இடம் வீழ்ந்தார். அதே ஓவரில் டிவில்லே  குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து 268 ரன்கள், இந்திய அணி வெற்றி:
கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணி 250 ரன்களை கடக்க உதவியாக இருந்த மொயின் அலி (24) மற்றும் அடில் ரஷித் (22) எடுக்க இங்கிலாந்து அணி 268 ரன்கள் என்ற ஒரு கவுரவமான இலக்கை எட்டியது. இந்திய தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஒய் சாலல் ஒரு விக்கெட்  கைப்பற்றினர்.
அடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் அதிரடியில் மிரட்ட மறுபுறம் ரோகித் சர்மா மெதுவாக விளையாட இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 7.5 ஓவர்களில் 57 ரன்களை எட்டிய நிலையில் ஷிகர் தவான் (40) மொயின் அலி பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் வேகமாக ரன் எடுத்தனர். இதனால் இந்திய அணி 14.5 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. முதலில் ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். 


அணியின் ஸ்கோர் 22.5 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. பின்பு விராட் கோலி அரை சதம் கடந்தார். இந்திய அணி 28.2 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. ரோகித் சர்மா தனது 18 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 
சதமடித்த ரோகித்சர்மா:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 75 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்துவீச்சில் ஜோஸ் பட்லர், ரால் ஸ்டம்பிங் முறையில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 33 ஓவர்களுக்கு 226 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்து லோகேஷ் ராகுல் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மேலும் விக்கெட் இழக்காமல் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரோகித் சர்மா அதிகபட்சமாக 137* ரன்களுடனும், லோகேஷ் ராகுல்9*  ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியில்  வெற்றி கணக்கை இந்திய அணி தொடங்கியுள்ளது.
Written By Toll Free. N

Post a Comment

0 Comments