5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி !

கார்டிப் மைதானத்தில் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக மொயீன் அலி நீக்கப்பட்டு ஜேக் பால் சேர்க்கப்பட்டார்.
கடகடவென விழுந்த பேட்ஸ்மேன்கள்:
முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் பால் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் லோகேஷ் ராகுல் களமிறங்கினார். ஷிகர் தவான் 10 ரன்கள் எடுத்த நிலையில்  பிளெங்கெட் பந்துவீச்சில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 5-வது பந்தில் லோகேஷ் ராகுலும் ஆறு ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்திய அணி 5 ஓவர் முடிவில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் கேப்டன் கோலியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். அதனால் இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர் முடிவில் 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுரேஷ் ரெய்னா அடில் ரஷித் பந்தை இறங்கி வந்து அடித்தாட முற்பட்டபோது பட்லர்  மூலம் ஸ்டம்பிங் முறையில் வெளியேறினர். அடுத்து தோனி களமிறங்கினார். இந்திய அணி 16 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்தது. கேப்டன் கோலி தனது பங்கிற்கு 47 ரன்கள் விளாசிய நிலையில் டேவிட் வில்லே  பந்தை தூக்கி அடிக்க முற்பட்ட போது அதனை ரூட் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 148 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இங்கிலாந்து தரப்பில் வில்லே, பிளெங்கெட், அடில்ஷா, ஜேக்பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹாலே  58 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹாலே தேர்வு செய்யப்பட்டார்.

ரன்களை வாரி வழங்கிய இந்திய வள்ளல்கள்:
இந்திய அணியிலிருந்து வள்ளல்களாக மாறிய புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் இந்திய அணியின் பந்து வீச்சின்போது புவனேஷ்வர் குமார் பந்து வீசிய முதல் 3 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. கடைசி ஓவரில் 4 பந்துகளில் மட்டும் 12 ரன்களை வாரி வழங்கினார்.

இதேபோல் குல்தீப் யாதவ் பந்து வீசிய முதல் 3 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்தார். குல்தீப் யாதவ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் 16 ரன்களை வாரி வழங்கினார்.
கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். முதல் பந்தை ஹாலே  சிக்ஸ் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். மூன்றாவது பந்தில் ஹாலே ஒரு ரன் எடுக்க, 4-வது பந்தில் வில்லே ஒரு ரன் எடுக்க இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்லேட் குச்சியின் அனாலிசிஸ்:
1) இந்திய அணியின் தோல்விக்கு முதல் மூன்று வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு வெளியேறியது முக்கியமான காரணமாக அமைந்தது.

2) இந்திய அணியின் ரன் ரேட் உயரும்போது விக்கெட் விழுந்ததும், அதன் காரணமாக பொறுமையாக விளையாடியதால் குறைந்த ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

3) கடைசி ஓவரில் 22 ரன்கள் அணியின் ஸ்கோர் 148 ரன்களாக உயர காரணமாக அமைந்தது.

4) இந்திய அணியின் பந்துவீச்சு முன்னேற்றம் தேவை. முதல் மூன்று ஓவர் குறைந்த ரன்களை வழங்கிய பந்துவீச்சாளர்கள் நான்காவது ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்குவது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது

5) ஹார்திக் பாண்டே இறுதி ஓவர் போட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அது இந்திய அணியை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றிருக்கும்.

6 டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் புர்மா இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கே வேறு மாறி இருந்திருக்கும். 

Post a Comment

0 Comments