எங்க தல தோனிக்கு திசையெட்டுலிருந்து 38வது பிறந்த தின வாழ்த்துக்கள்!

1981, ஜூலை7, இந்திய அணிக்காக ஒரு துருவ நட்சத்திரம் பிறந்தது. சாதரண குடும்பத்தின் மகனாக பிறந்தவர் பள்ளி கால்பந்தாட்ட குழுவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை  விதி வீல் பிரேக் கொடுத்து கிரிக்கெட்டுக்கு அனுப்பியது அன்று,   அவருக்கு தெரியாது   ஒரு மாபெரும் தேசத்தின் முக்கிய அடையாளமாக போகிறவர் என்று, ஆனால் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு மற்றும் ஏற்றுகொண்டுள்ள தனது பணியை சிறப்பாக செய்து வந்தார் சிறுவர் தோனி.

ஐம்பது ரூபாய் நோட்டு: 
பள்ளி கால்பந்தாட்ட விளையாட்டில் கோல் கீப்பராக இருந்தவர்  தனது கோச் மூலம் கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார். பிஞ்சு விரலில் தோனி செய்த லாவகமான கேட்சுகளால் அசந்து போன கோச் அவருக்கு  தொடர்ந்து பயிற்சி கொடுத்தார். பத்தாம் வகுப்புக்கு பிறகு தோனி கிரிக்கெட்டில் முழு ஆர்வம் காட்டினார்.  12 வகுப்பு வரை தோனி பள்ளி அணி, கிளப் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார். தேவல் சாகேவால் சென்ரல் கோல் பீல்ட் குழுவில்  தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது  தோனி அடிக்கும் ஒவ்வொரு 6 ரன்னிற்கும் ரூபாய் 50 தோனிக்கு கொடுப்பார். 

ராஞ்சியில் தோனி: 
தோனி 1999 களில் ராஞ்சிப் போட்டி, 19-வயதுகுட்ப்பட்டோர்க்கான பீகார் அணி, மற்றும் சீனியர் பீகார் அணியிகளில் இடம் பெற்று தனது அர்ப்பணிப்பு தன்மையை ஆட்டங்களில் வெளிப்படுத்தினார்.


ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு: 
கால்பந்து அணியில் இருந்து கால் மாற்றப்பட்டு கிரிக்கெட்டில் களமிறக்கப்பட்டார். டிஏவி பள்ளி அணியில் 1997-1998இல்  ஒரு  கீப்பர் நிலையிலிருந்து தன்னை   தானே சிறந்த பேட்ஸ்மேனாக நிருபித்தார். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் வாய்ப்பை உண்டாக்கும் ஒரு சிறந்த வீரராக விளையாடத் தொடங்கினார். 1997-1998களில் அவர் விளையாடிய விளையாட்டுக்களில்தான் ஹெலிகாப்டர் சாட்டுகள் பெரிதும் பேசப்பட்டன.

மாகி- மகா தோனியான தருணங்கள்: 
ஆல் இந்தியன் ஜூனியர் செலக்ஷ்ன் கமிட்டி தேர்வு களத்தில் யுவராஜ் சிங்கும் தோனியும் ஒரே களத்தில் ஒன்று போல் நின்று ஆடிய தருணங்கள் மலையும் மலையும்  மோதிய தருணங்களாகும். ஒருவருக்கொருவர் நட்பு இல்லையென்றாலும் ஒருவரின் திறன் கண்டு ஒருவர்  பூரித்தனர்கள். ஆம் மகாபாரதத்தில் அர்ஜூனன் மற்றும் கர்ணனுக்கு இணையாக இருவரும் நின்று ஆடினார்கள் என்றே கூறலாம்.
ரயில்வே டிக்கெட் பரிசோதகராக வாழ்வினை தோனி தொடங்கினார். அப்பொழுது தருணங்கள் சிறப்பாக அமையாத பொழுது தடுமாறமல்  தவறு எங்கே நடந்தது என்று அறிந்து ஆர்வம் காட்டி அதனை சரி செய்வதில் வள்ளவரானார். அதுதான் பின்னாளில் சிறந்த தலைவராக அவரை  உருவாக்கியது. 
கிரிக்கெட்டினை முழுமையாக நம்பி களத்தில் இறங்கிய அந்த இமாலய மனிதரிடம் எப்பொழுதும் இருந்தவொன்று நிதானம்,  திறன் அறிந்து செயல்படுதல் அவரின் சிறப்பு அம்சம் ஆகும்.
 
முதல் போட்டி:
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியினை 2004 இல் இந்திய அணிக்காக தொடங்கி விளையாடியவர். பரப்பரப்பு ஆரவாரமில்லாமல் நிறை குடமாக இக்கட்டான தருணத்தில் அணியில் தன்னை நிருப்பித்தவர். 2005 ஏப்ரல் 5,பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனியின்  விளாசல்கள் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் விழிகளுக்கெல்லாம் விருந்தாகி போனது. அன்று முதல் ஊடக பார்வையில் உருபெற தொடங்கினார் தோனி இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரரானார்.

 நாயகனுக்கு  நாடு கொடுத்த கௌரவம்: 
தனது துடிதுடிப்பான ஆட்டத் திறனால் 2007 ஆம் ஆண்டு ராஜீவ் கேல் ரத்னா விருது பெற்றார். 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிவில் விருதான பதம்விபூசன் விருது பெற்றார். 2018இல் பத்ம்பூசன் விருதினையும் வென்றார். ஐசிசியின் ஒருநாள் போட்டிக்காக 2011,2012,2013 விருதுகளை வென்றார். 2008,2009 இல் ஐசிசியின் சிறந்த விளையாட்டு வீரர் எனும் விருது பெற்றார். 
2011-ஐபிஎன் இந்தியன் ஆப் தி இயர் என்னும் விருதினையும் வென்று விருதுகளின் நாயகனாக திகழ்ந்தார். இது தவிர இப்பொதைய டிரெண்டுகளான ஐபிஎல் விருதினையும் வென்றுள்ளார். 

ராணுவ கௌரவம்: 
சிறந்த விளையாட்டு, தலைமை பண்பு மூலம் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக திகழ்ந்தார். இதன் பொருட்டு தோனியை கௌரவிக்க எல்லைப் படைக்கான லெப்டினன்ட் கர்னல் விருது கொடுக்கப்பட்டது. அதன்படிஇந்திய ராணுவத்தை சேர்ந்தவர் என்னும் அந்தஸ்துடன் விருதுகளை பெரும் பொழுது ராணுவ சீருடையில்  பெற்றுக்கொள்வார்

ஸ்டைல் மன்னன், கூல் கேப்டன்: 
இந்திய அணியை தோனிக்கு முன் தோனிக்கு பின் என பார்த்தால் இரண்டிலும் ஏற்ற இறக்கங்கள், புகழ் மாலைகள், அர்ச்சனைகள் என்ன எது வந்தாலும் அனைத்தையும் பாஸிட்டீவாக எதிர்  கொண்டு துவளாமல் அணியை கூலாக கூட்டி சென்றார் .

ஸ்டைல் மன்னன் மற்றும் கூல் கேப்டனாக வளம் வந்தார். அவருடைய ஹேர் ஸ்டைல் மிகுந்த பிரபலமாக இருக்கும். இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு நாயகனாக திகழ்ந்தார். ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்று அணியை வழிநடத்திச் சென்றார்.

எதிர்கருத்துக்கள் எளிமையாக எதிர்கொண்டார்:
மகி  இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தில் தனக்கு எதிராக பல்வேறு கருத்துகளையும் சந்தித்தார். அவர் எடுத்த முடிவுகளால் எதிர்ப்புகளையும் சந்தித்தார். இருந்த போதிலும் அனைத்து கருத்துக்களையும் எளிமையாக சமாளித்தார். மேலும் அணியின் நலன்கருதி முடிவுகள் எடுக்கப்படுகின்றது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார்.
இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த தோனி  2011 ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய உலக கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து கிரிக்கெட்டின் கடவுளான சச்சினுக்கும் சிறந்த மரியாதை  கொடுத்து அணியை கொண்டாடினார். இக்கட்டான நேரங்களில் சிறந்த முடிவுகள் எடுக்கும் சிறப்பான இந்திய அணி தலைவர் அதாவது 'தல'யவர் எனப் பெயர் பெற்றார். 

தலைக்கு 500: 
நமது இந்திய அணியின் தலயான  தோனிக்கு நாளை பிறந்த தினம் தலைக்கு 500 வது மேட்ச் இந்தியாவில் சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் இருவரை தொடர்ந்து  மூன்றாவது வீரர்ராக 500வது கிரிக்கெட் போட்டியினை  இன்று எதிர்கொள்கிறார். அவர் இன்றும் ஐபிஎல் போட்டிகளில் பங்கு கொண்டு தலையாக தன்னை நிருப்பிது கொண்டிருக்கும் தோனிக்கு இனிய 38வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments