சிலேட்குச்சியின் டிஎன்பிஎஸ்சி வினா-விடைகள் விளக்கத்துடன் படியுங்க தேர்வை வெல்லுங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான சிலேட்குச்சி  பயிற்சிக்காக வினாக்களுக்கான விடையை விளக்கத்துடன் கொடுத்துள்ளோம். படித்து பயன் பெறவும்.


1. புதிய தேசிய வனவிலங்கு உயிர்வாழ்திட்டம் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?
விடை: அக்டோபர்  2,2017
விளக்கம் : 
2017 முதல் 2031 ஆண்டு வரையிலான புதிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டத்தை மத்திய அரசு அக்டோபர் 2, 2017இல் புதுடெல்லியில் உலகளாவிய வனவிலங்கு திட்ட மாநாட்டில் வெளியிட்டது. புதிதாக அறிவிக்கபட்டுள்ள 14 வருட திட்டங்களில் புதிய தொழில் நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணித்தல், இணைய வழி கண்காணித்தல் அறிவிக்கப்பட்டது.

 2. சீனா-இந்தியா இடையிலான சுமார் எவ்வளவு நீளம் கொண்ட எல்லைப் பகுதி அருணாச்சலப் பிரதேச  எல்லை பகுதியில் அடங்கியுள்ளது?
விடை: 3500
விளக்கம் : 
அருணாச்சலப்  பிரதேசம் எல்லையோரம்  திபெத்தில் 409கிமீ நீளம் புதிய அதிவிரைவு சாலையை சீன அரசு அக்டோபர் 2017ல்  துவங்கியுள்ளது. அருணாச்சல மாநிலத்தை  அதிகாரத்திற்குட்பட்ட  திபெத் நாட்டின் தென்பகுதி சீனா உரிமை கோருகிறது. 

3. சதுப்பு நிலங்கள் என்றால் என்ன?
விடை: ஏராளமான பறவைகள், மீன்கள், பிராணிகள் வாழும் இடங்கள் சதுப்பு நிலங்கள் ஆகும். 
விளக்கம்:
பறவைகள், மீன்களுடன் பிராணிகள் வாழும் இடம் மற்றும் ஏரி அல்லது குளம் என்பது வெறும் நீர்தேக்கம் மட்டுமே சதுப்பு  நிலம் என்பது  ஏராளமான உயிரினங்கள் வாழும் அமைவிடம் ஆகும். 2010 ஆம் ஆண்டில் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு, நிர்வாகம் குறித்து உருவாக்கியது.  2017 இல் சதுப்பு நிலங்கள் தொடர்பான விதிகள் மீண்டும் உருவாக்கப்பட்டது. 

4. முதல் பிரெஞ்சு கம்பெனி யாரால் தொடங்கப்பட்டது 
விடை: பிரான்கோயிஸ் காரன் 1668
விளக்கம் : 
பிரெஞ்சு கம்பெனி முதன் முதலில் கால்பெர்ட் என்பவர் 1664ல் தொடங்கினார். முதல் பிரெஞ்சு கம்பெனி சூரத்தில் தொடங்கினார். முதல் பிரெஞ்சு கம்பெனி சூரத்தில் பிரான்கோயிஸ் காரன் என்பவரால் 1668இல் தொடங்கப்பட்டது. சூரத்தையடுத்து மசூலிப்பட்டிணத்தில் தொழிற்சாலை  தொடங்கினார். 

    5. பக்சார் போரின் ஆங்கிலப் படைதளபதியாக இருந்தவர் யார்?
     விடை:மேஜர் முன்ரோ 
    விளக்கம் : 
    ஆங்கில தளபதி மேஜர் முன்ரோ தலைமையில் 1764இல் மூன்று பிரிவில் போர் நடைபெற்றது. பக்சார் போரினை வென்று அவாத் பகுதியை கைப்பற்றினார்கள். ஷா ஆலம் பிரிட்டிஷின் கீழ் கொண்டு வரப்பட்டார். அலகாபாத் உடன்படிக்கையில் 50 லட்சம் கொடுத்து போர் இழப்பீட்டை பிரிட்டிஷார் பெற்றனர். 

    6. இந்தியா எத்தனை முறை அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தது?
    விடை: 3
    விளக்கம் : 
    இந்தியா நெருக்கடிநிலையினை சரத்து 352இன் கீழ் கொண்டுவரலாம். இதுவரை 3 முறை நெருக்கடிநிலை இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. 1962இல்  சீனப் போரின் பொழுது நேரு பிரதமராக இருந்தபொழுது  ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவராக இருந்தார்.  இரண்டாம் முறையாக 1971 பாகீஸ்தான் போரின் பொழுது இந்திரா பிரதமராக இருந்தார். வி.வீ.கிரி குடியரசு தலைவராக இருந்தார். மூன்றாவது முறையாக 1975ஆம் ஆண்டு உள்நாட்டு நெருக்கடிநிலையின் போது இந்திரா பிரதமராகவும் பகருதீன் அலி அகமது குடியரசு தலைவராகவும் இருந்தார். 

    7. மத்திய அமைச்சரவை எத்தனை பிரிவு கொண்டது? 
    விடை: 3 பிரிவு 
    விளக்கம் : 
    கேபினட் அமைச்சர், இணை அமைச்சர், துணை அமைச்சர் என மத்திய அமைச்சரவை பிரிக்கப்பட்டது. கேபினெட் தனித்துறை 44வது திருத்ததின் கீழ் கொண்டுவரப்பட்டது. கேபினட் அமைச்சகம் நிர்வாகத்தின் மையம் மேலும் இது கொள்கை உருவாக்க அமைவிடம் ஆகும். இணை அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பிரிவினருக்கு தனித்துறை கிடையாது கேபினட் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். 

    8. திட்டக்குழு யாருடைய பரிந்துரையின் கீழ் உருவாக்கப்பட்டது?
    விடை: கே.சி ,நியோகி
    விளக்கம் : 
    கே.சி. நியோகி கமிட்டியின் பரிந்துரையின்  பேரில் மார்ச் 1950 இந்திய அரசின் நிர்வாக தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு அல்லது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்ல. 

    9. இந்தியாவின் மிக உயர்ந்த திட்டமிடும் அமைப்பான திட்டக்குழு எப்பொழுது கலைக்கப்பட்டது? 
    விடை: 2014, டிசம்பர் 31
    விளக்கம் : 
    இந்தியாவின் மிக உயர்ந்த திட்டக்குழு அமைப்பினை கலைக்கப்பட்டு சிற்சில மாற்றங்களுடன் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பையும் உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு தற்கால நடைமுறைகேற்ற ஆலோசனைகள் வழங்கியும் 2015 ஜனவரி 1 முதல் நிதி ஆயோக் புதிய அமைப்பை உருவாக்கியது. 

      10. இந்தியாவின் மிகநீண்ட கடற்கரை கொண்ட இரண்டாவது மாநிலம் எது?
      விடை: ஆந்திர பிரதேசம் 
      விளக்கம் : 
      ஆந்திர பிரதேசம் இந்தியாவின் நான்காவது மாநிலம் ஆகும். பரப்பளவில்  5-வது மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும் . ஆந்திர பிரதேசம் 972 கிமீ கடற்கரை கொண்டு இரண்டாவது மிகநீண்ட கடற்கரை கொண்ட மாநிலமாக திகழ்கின்றது.

        Post a Comment

        0 Comments