சில நாட்களுக்கு முன் நித்திரை அற்று தவித்தேன் , மொபைல் போனில் பேட்டரி காலி ! வேறு வழின்றி தொலைக்காட்சியை எழுப்பினேன்.
மின்னல் வேகத்தில் சேனல்களை மாற்றுகையில் "காஞ்சிவரம்" என்று கண்ணில் பட்டது. நான் வசிப்பது காஞ்சி மாவட்டம் என்பதாலும் , பல்லவர்களை மிகவும் பிடிக்கும் என்பதாலும் சற்று நேரம் பார்க்கலாம் என்று தீர்மானித்தேன்.
"பொன்னுஞ்சல் தொட்டிலிலே" என்ற பாடல் ஒலிக்க துவங்கியது , அப்பாடலின் இடையிலியே ஏழை நெசவாளியான பிரகாஷ் ராஜ் பிறந்த தனது கை குழந்தைக்கு " உன்னோட கல்யாணத்துக்கு நா பட்டு புடவை பரிசளிப்பேன் " என்று வாக்குறுதி அளிக்கிறார் !
பொதுவாக இதுபோன்ற படங்களை பார்ப்பதே அரிது , மிக நேர்த்தியான ஒளிப்பதிவு , செயற்கை அற்ற நடிப்பு . குறிப்பாக பிரகாஷ் ராஜின் மனைவியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி , அவர்கின் பெண்ணாக வரும் குழந்தை நட்சத்திரம் , சக நெசவலர்கள் , ஜமீன்தார் , போலீஸ் ஏட்டு , மொழிபெயர்ப்பாளர் என்று மிக அருமையாகவே வாழ்ந்திருக்கிறார்கள் கதாபாத்திரமாகவே!
நடிகர் விமல் சில காட்சிகளில்நன்றாகவே நடித்துள்ளார்.
இப்படம் நமது பாவப்பட்ட நெசவாளர்களின் வாழ்வியலை , கம்யூனிஸத்தின் தொடக்கத்தை , சுதந்திரத்திற்க்கு முந்தைய இந்தியா , என்று மிக ஆழமாக பயணித்து சோகமான முடிவுடன் நிறைவுறுகிறது.
இறுதி காட்சிகளில் மிக அருமையாக நடித்து கண்களை குளமாக்குகிறார் பிரகாஷ் ராஜ் ! அதுவும் அந்த சிரிப்பு சிலிர்ப்பு . அவர் அப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
இது ஒரு பிரிய தர்ஷன் இயக்கிய படம் என்றே நம்ப முடியவில்லை.
படம் முடிந்ததும் நெசவாளர் கூட்டுறவு சங்கம் படிப்படியாக நிறுவப்பட்டதை எழுத்து மூலம் காட்டுகிறார்கள்.
இனி பட்டு வஸ்திரங்களை கண்டாலே இப்படம் நினைவிற்கு வருவதை தவிர்க்கவியலாது .
சா.ரா
0 Comments