அடங்க மறுக்கும் பாகிஸ்தான், அடித்துதள்ளுமா இந்தியா!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 -ஆவது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.  இதன் மூலம், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்தார். நாடு முழுவது பரப்பரப்பானது. 70 வருடங்களுக்குப் பின் இந்தியாவின் கம்பீரமான இந்த முடிவானது பாகிஸ்தானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

பாகிஸ்தான்,  ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருதாகவும், அங்கு மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் சர்வதேச நாடுகளிடம் குற்றம்சாட்டி வந்தது புரளியை கிளப்பி வந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு செவிசாய்க சர்வதேச அரங்கமே மறுத்தது.

 இதனால் ஆத்திரமடைந்த அந்த நாட்டு, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், ராணுவ நிலைகள் மீது ராணுவ தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது.




போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஒருபுறம் ராணுவ தாக்குதலும், மறுபுறம் பயங்கரவாதிகளை ஜம்மு -காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வது என, அந்த மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் அத்துமீறல்கள் தொடர்ந்து  கொண்டு, சதி வேலைகளை செய்து வருகிறது.

அக்டோபர் 19 அன்று,  டங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.

இதையடுத்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடி பீரங்கி தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் மூன்று பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அடங்கமறுக்கும் பாகிஸ்தான் இந்தியாவின் பொறுமையை  சோதித்துக் கொண்டிருக்கின்றது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தில் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அத்துமீறும் பாகிஸ்தானால் எல்லையில் ராணுவவீரர்களுக்கு ஆபத்து வராமல் இருக்க தொடர்ந்து எல்லையில் நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பதிலடி கொடுக்க அனுமதியும்  வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு தொல்லை கொடுத்தால் இந்தியா, பாகிஸ்தானை தொலைத்துக்கட்ட தயங்காது என்பதை  நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Post a Comment

0 Comments