வீட்டிலேயே கோல்டன் பேசியல் எப்படி செய்யலாம்னு பாப்போம் வாங்க!

பண்டிகை காலம் நெருங்கிவிட்டது வேலைப்பளு அதிகமாகும் அத்துடன் தினமும் பேஸ் பேக் போட நேரமிருக்காது கோல்டன் பேசியல் போட ஆசை ஆனால் நான் மணபெண் அல்லவே எவ்வாறு போடுவது  அதற்கு பதிலாக நான் என்ன பயன்படுத்தினால் என முகம் பட்டு போன்று  தகதகவென் ஜொலிக்கும் என எண்ணுபவரா நீங்கள், நானும் நிறைய யூஸ் பண்ணட்டேன் பட் புதுசா என்ன இருக்குன்னு பாப்போம் என்று தேடுவோரா நீங்கள் அப்படியெனில் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்காகத்தான் தொடர்ந்து படிங்க.



வேலைப்பளு காரணமாக  இருக்கும் பெண்கள், மணப்பெண்கள் மற்றும் இளம் பெண்கள் குழந்தைகள் யார் வேண்டுமானலும் இந்த கோல்டன் பேசியலை எளிதாக பயன்படுத்தலாம். இது முகத்திற்கு வசிகரத்தை கொடுத்து மிக விரைவில்  முக அழகை ஜொலிக்க வைக்கும் எளிதான பேக் பெண்களே நோட் பண்ணுங்க

முகம் தங்கம் போல் குளோவா ஜொலி ஜொலிக்க தேவையான பொருட்களை கிழே கொடுத்துள்ளோம் அதனை முறையே பெற்று கலக்கவும். 

பாசிப்பயிறு 100 கிராம் அளவு
கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் 
பூலாங்கிழங்கு 5 கிராம் 
கசகசா 10 கிராம் 
ரோஜா பொடி 10 கிராம் 
எலுமிச்சை இலை 5 கிராம் 
துளசி 5  கிராம் 
வேப்பிலை 5 கிராம் 
பூலாங்கிழங்கு பொடி 5 கிராம் 

ஆகியவற்றை நன்கு கலக்கி தயிர் முகம், கை, கால்களில் தடவி 10 முதல் 15 நிமிடம் கழித்து வெதுப்பான தண்ணீர் தொட்டு முகத்தை துடைத்து எடுக்கவும். பின்பு ரோஸ் வாட்டரை   காட்டனால் ஒற்றி முகத்தில் வைத்து எடுக்கவும் முகத்தில் தங்கம் போன்ற பளப்பளப்பு  கிடைக்கப் பெறலாம். 

மிக எளிமையான  இந்த பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது அதனை வாங்கி அரைத்து வைத்து கொண்டு  தினமும் பயன்படுத்தி வந்தால் முகத்தில் மங்கு, மாசு, முகப்பரு,  எண்ணெய் வழிதல் போன்ற சிக்கல்கள் குறையும் அத்துடன்  அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் இயற்கை அழகை பேணி காக்கலாம்.  வெய்யில் மற்றும் பனி காலங்களில் உதவக்கூடியது முகத்தில்  நீர்மைத் தன்மை கொடுத்து சிறக்கச் செய்கின்றது இந்த எளிய கோல்டன் பேசியலை பயன்படுத்தி  அழகை பெருகூட்டுங்கள் பெண்களே.

Post a Comment

0 Comments