வாழ்கையில் ஏழு பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

வாழ்க்கையில் ஏழு   பண்புகளை வளர்த்து  பின்ப்பற்றுங்க உங்களால் நிச்சயம் எந்த ஒரு சூழலையும் எளிதில் கையாள முடியும். இந்த ஏழு விசயங்கள் நம்மை ஆற்றல் வாய்ந்தவர்களாக உருவாக்கும். அவற்றை தெரிந்து பின்ப்பற்றுங்கள் நீங்களே உணர்வீர்கள் வாழ்க்கையின் உண்யான போக்கினை எளிதில் நம் கட்டுக்குள் வைக்கலாம்.


படிக்கும் பழக்கம்: 
 நீங்கள் என்ன வேலை செய்தாலும் சரி எந்த சூழலில் இருந்தாழும் சரி உங்களுக்குள் நிச்சயம் இருக்க வேண்டியது   வாசிப்பு பழக்கம் புத்தகம் வாசிப்பு உங்களை தினசரி நிகழ்வினை அப்டேடாக இருக்க வைக்கின்றது. அத்துடன் உங்களை வழி நடத்தும் எந்த ஒரு  சூழலிலும். 

எழுதுங்கள்: 
நீங்கள் அறிந்த  அல்லது தெரிந்து கொள்ள வேண்டியது எதையாவது ஒன்றினை எழுதுங்கள் அப்பொழுது அது குறித்த அறிவு அகலமாகும். நீங்கள் எழுத தொடங்கும் எந்த தலைப்பினையும் நேரடியாக  காணும் பொழுது அது குறித்த உங்கள் பார்வை மற்றவர்கள் பார்வை என அனைத்து திசைகளிலும் சிந்திக்க தொடங்குவீர்கள். நீங்கள் எழுதியதை நீங்கள்  திருப்பி பார்க்கும் பொழுது உங்களுக்கு  அந்த குறிப்பிட்ட தலைப்புகளின்  புதுமை புரியும். எப்பொழுதும் வாழ்வின் மூன்று பண்புகள் நன்றியுணர்வுடன் இருத்தல் மற்றும் தவறுக்கு மன்னிப்பு  கோருதல் மற்றும் செய்யும் செயலை திருந்த செய்தல் அன்புடன் பழகுதல் உங்களை வலிமைப் படைத்தவர்களாக  உருவாக்கும்.

நன்றியுணர்வு: 
நன்றியுணர்வுடன் இருத்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.  நன்றியுணர்வு நல்லதொரு  ஆற்றலையும் அதன் வளர்ச்சி பெருக்கத்தையும். புதிய வாய்ப்புகளையும் கொடுக்கும் சாவியாக உள்ளது. முழுமையான  ஈர்ப்பு தன்மையை வாழ்வில் பெற நன்றியுணர்வு   வாழ்க்கைக்கு கொடுக்கின்றது. 

தியானம்: 
தியானம் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். அப்பொழுது இயற்ககையான புத்துணர்ச்சியை மனமும் உடலும் பெறும். இதனால் சிறந்தவொரு உணர்வும் உற்சாகமும் அதிகரிக்கும். அமைதியாக 20 நிமிடம் இருப்பது கூட தியானத்திற்கு ஒப்பானது ஆகும். 

இரக்க தன்மை: 
இரக்கத் தன்மையை  வளர்த்து கொள்ளுங்கள் கொடுப்பவராக இருங்கள் பெறுவது குறித்து அதிகம் சிந்திப்பதை விட இது சிறந்தது ஆகும். மற்றவர்களிடம் இருக்கும் நல்ல நேர்மறையானவற்றை மற்றும்  உடன் எடுத்து பழகுங்கள். நன்மை என்ற நேர்மறை சக்தியை பிறரிடம் காணும் பொழுது அதனை பெறுவது எளிதாக அமையும். 

குறுநகை: 
குறுநகையுடன்  கடந்து  செல்லுங்கள் வாழ்க்கையின் எந்த சவாலும் உங்களை முடக்காது. எப்பொழுதும் மகிழ்ச்சியுணர்வை கொண்டிருங்கள் அது வாழ்வின் நீண்ட பயணத்திற்கு அழைத்துச் செல்லும். எதுவானாலும் குறுநகையுடன் கடந்து செல்லுங்கள். கிடைக்கும் நேரங்களில் மகிழ்ச்சி கரமாக விளையாடுங்கள், மகிழ்ச்சி தரும் செயலை பாருங்கள்  செயலாக செய்யுங்கள். அது வாழ்க்கையினை எளிதாக்கி கொடுக்கும். 

அன்பு: 
அன்பு பாராட்டுங்கள் அதனை எளிதாக நம்மால் கடக்க முடியும்.  அன்றாடும் வாழ்க்கையை அன்பு பொங்க தொடங்குகள் அது உங்களை பரந்த  உலகை வசப்படச் செய்யும். இப்பொழுது, இன்று நாளை, எப்பொழுதும் அன்புடன்  பயணியுங்கள் அன்பிற்கு தனி நேரம் மற்றும்  நிகழ்வுகள் தேவையில்லை அது எப்பொழுதும்  சக்தி வாய்ந்த ஆயுதமாக இருப்பதுடன்  சாதகமான சூழல்களை எப்பொழுதும் அன்பு கொடுக்கும். காலங்கள் மாறினாலும் அதன் தன்மை என்றும் மாறாமல் நிலைத்திருக்கும். 

எளிதாக  அனுகவும்: 
எளிதாக எதனையும் அனுகவும்   எதற்கும் தயாராக இருத்தல் , பாஸிட்டாவாக எடுத்து செல்லுதல், வாழ்க்கை  அந்தந்த தருணங்களுக்கு ஏற்ப எடுத்துச் செல்லுத்துதல் இதுவே சிறந்த பண்புகள் ஆகும். ஒரு  செயலினை எவ்வாறு அனுகுகிறோம் என்பதை  பொருத்து  நமது செயலின் போக்கு நிர்ணயம் ஆகும். இதனால் வாழ்வு கடினமற்றதாக அமையும்.

Post a Comment

0 Comments