குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் கொடுத்துள்ளோம் அவற்றினை நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்க.
இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் ரயில் நிலையம் எனும் பெருமையை கவுகாத்தி ரயில் நிலையம் பெற்றுள்ளது.
சாலை விபத்திற்குள்ளாவோர்களின் மருத்துவ செலவை ரூ50,000 வரை அரசாங்கமே செலவிடும் எனும் புதிய திட்டத்தை குஜராத் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய மனநல மற்றும் நல்வாழ்வு கல்வி நிறுவனத்தை மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பைரான் சிங் சேகாவத் அந்தியோதயா ஸ்வரோஜார் யோஜனா என்ற பெயரில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 4% வட்டியில் ரூ.50,000 கடன் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்துள்ளது.
தேசிய காற்று-சூரிய சக்தி ஹைபிரிட் கொள்கையை புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சூரியசக்தி தொடர்பான சர்வதேச சந்தையில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ளது என மெர்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களை சீனா, அமெரிக்கா பெற்றுள்ளது.
2017-2018 ஆம் ஆண்டில் அதிகளவில் இணைய சேவை நிறுத்தப்பட்ட தெற்கு ஆசியா நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என யுனெஸ்கோ வெளியிட்டுள்ள தெற்கு ஆசியா பத்திரிக்கை சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 5 ஆயிரம் ஆசியா நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என யுனெஸ்கோ வெளியிட்ட தெற்காசிய பத்திரிக்கை சுதந்திர அறிக்கை 2017-2018 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபை வளர்ச்சி திட்டத்தை திறன் மேம்பாட்டு மையம் ஹைதிராபாத் நகரில் அமைக்கப்படவுள்ளது.
ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934ன் பிரிவு 8(1)(c) படி, பட்டய கணக்காளர் சுவாமி நாதன் 4 ஆண்டுகாலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியத்தில் பகுதி நேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குருமூர்த்தி:
ஆர்எஸ்எஸ் ஆதரவாளர், சுதேசி ஜாக்ரான் மஞ்ச் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர்,
தொழில் அதிபர் சதீஷ் காசிநாத் மராதே என்பவரும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.
ப்ரூ(ரியாங்) இனப் பழங்குடியினரை திரிபுராவிலிருந்து மிசோரத்துக்கு மீட்கும் நடைமுறையை, மிசோரம் மாநிலம் ஆகஸ்ட் 9 தொடங்கி செப்டம்பர் 10 வரை செயல்படுத்தியது.
1997 இல் தேசிய ப்ரூ விடுதலை முன்னணி போராளிகளால் தம்பா புலிகள் காப்பகத்தின் உள்ளே வனக்காவலர் கொல்லப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வகுப்பு வாத பதற்ற்தால் ப்ரூ பழங்குடியினர் திரிபுரா மாநிலம் சென்று தங்கினார்கள்.
கேரளாவின் இரண்டாவது பெரிய நாளிதழ் மாத்ருபூமி ஊடகக் குழுமம் ஆகஸ்ட் 8 முதல் புதிய முயற்சியான ஊடகத்துறையின் சிறபியல்புகளை ஊக்குவிக்க மாத்ருபூமி ஊடகப் பள்ளியை கொச்சியில் தொடங்கியுள்ளது. மாதருபூமி ஊடகக் குழுமம் கேபி. மேனன் என்ற சுதந்திர போராட்ட வீரரால் 1922 இல் இது ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் படிக்க:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் குறிப்புகள்!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் குறிப்புகள்!
0 Comments