கபடியில் 28 ஆண்டுகள் சாம்பியனாக இருந்த இந்திய அணி ஆசிய விளையாட்டு அரையிறுதிப் போட்டியில் ஈரானிடம் தோற்றது. இதன் மூலம் இந்திய அணி அறிய தங்கப் பதக்கத்தை பெறும் வாய்ப்பினை இழந்தது.
இந்திய அணி ஈரானை எதிர்த்து விளையாடிய ஆசிய விளையாட்டு அரையிறுதிப் போட்டியில் முதல் துவக்கத்தில் 6-1 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தது. அடுத்து இரண்டாவது இந்தியா- ஈரான் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர்கள் செய்த தவறுகளால் ஈரான் தொடர்ந்து இரு புள்ளிகளாக அதிகரித்து 9-9 என சமன் செய்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 11-14 புள்ளிகள் பெற்று இந்திய அணி வாய்ப்பினை இழந்து கொண்டு வந்தது. தொடர்ந்து செயல்பட முடியாமல் போன் இந்திய கபடி அணியினரால் 18-27 புள்ளி கணக்கில் ஈரானிடம் மோசமாக வீழந்தது.
2014 ஆம் ஆண்டு ஆசிய கபடியில் இந்திய அணியிடம் தோற்ற ஈரான் இம்முறை வென்று பதிலடி கொடுத்தது. இதனால் வெள்ளியுடன் இந்திய கபடி அணி நாடு திரும்பும்.
28 ஆண்டுகள் தொடர்ந்து ஜெயித்து வரும் இந்திய அணி இம்முறை தோற்க காரணம் என்ன என்பதை உடனடியாக தெரிந்து சரி செய்ய வேண்டும். எதிரணி வீர்ர்களிடம் தன் பலத்தை இனிவரும் காலங்களில் தொடர்ந்து நிருபிக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய கபடி அணியை வாழ்த்தி வரவேற்போம்.
தொடர்ந்து சரியான வீரர்களை தேர்வு செய்வது முறையான பயிற்சி மற்றும் பழைய நுணுக்கங்கள் என இந்திய அணி தன்னை தற்காத்து கொள்ள வேண்டும்.
மகளிர் அணி:
இந்திய மகளிர் அணி கபடியில் அறையிறுதி போட்டியை வென்றது. மகளிர் கபடி அணி அரையிறுதிப் போட்டியில் கொஞ்சம் தினரியது இருப்பினும் தொடர்ந்து புத்திசாலித்தனமாக செயல்பட்டு சீன தைபேவை அரையிறுதி போட்டியை வென்று பைனலில் நுழைந்தது. இந்திய பெண்கள் கபடி அணியினர் ஈரானிடம் மோதவுள்ளனர் வெற்றியுடன் தாயகம் திரும்பும் என நம்பிக்கையில் இருந்தனர்.
மகளிர் இன்று கபடி அணியினர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து பதக்க வாய்ப்பை இழந்தனர். 28 ஆண்டுகள் சாம்பியனாக இருந்த ஆண்கள் கபடியினர் தோல்வி அதனால் தாங்கள் வெல்ல வேண்டிய அழுத்தம் போன்றவற்றால் பெண்கள் கபடி அணியினர் ஈரான் அணியிடம் தோற்றுள்ளனர்.
மகளிர் இன்று கபடி அணியினர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து பதக்க வாய்ப்பை இழந்தனர். 28 ஆண்டுகள் சாம்பியனாக இருந்த ஆண்கள் கபடியினர் தோல்வி அதனால் தாங்கள் வெல்ல வேண்டிய அழுத்தம் போன்றவற்றால் பெண்கள் கபடி அணியினர் ஈரான் அணியிடம் தோற்றுள்ளனர்.
சாம்பியன் அணிகளின் தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது ஆனால் தவறுகளை கண்டு பிடித்து சரிசெய்யலாம். இரு அணிகளுக்கும் ஆறுதலாக இருந்து உதவுவோம் வரவேற்போம்.
மேலும் படிக்க:
தனிநபர் துப்பாக்கி சுடும் பிரிவில் மேலும் ஒரு தங்கம் வென்ற இந்தியாவின் பெண் சிங்கம்!
0 Comments