அழகு ஆரோக்கியம் இவையிரண்டும் பாதுகாக்க
வேண்டியது அவசியம் ஆகும் .பெண்களுக்கு ஆரோக்கித்துடன் பொலிவூட்டும் அழகு பெற உதவிகரமாக இருக்கவே, உங்களுக்காக
இந்த குளியல் பொடியை அறிமுகப்படுத்துகிறோம். உபயோகித்து கருத்துகளை தெரிவியுங்கள்
மூலிகை குளியல் பொடி
--------------------
* செய்முறை
1.வெட்டிவேர் 100 கிராம்
2.விலாமிச்சுவேர் 100 கிராம்
3.சந்தனப்பட்டை 100 கிராம்
4.ஆவாரம்பூ 100 கிராம்
5.ரோஜாப்பூ 100 கிராம்
6.செம்பருத்திபூ 100 கிராம்
7.அவுரிவேர் 100 கிராம்
8.அதிமதுரம் 100 கிராம்
9.சீகக்காய் 100 கிராம்
10.கார்போக அரிசி 100 கிராம்
11.கஸ்தூரி மஞ்சள் 200 கிராம்
12.கோரக்கிழங்கு 200 கிராம்
13.சிறுபயறு 200 கிராம்
14. ஜாதிக்காய் 100 கிராம்
15.துளசிவேர் 100 கிராம்
16. எலுமிச்சை தோல் 100 கிராம்
17.ஆரஞ்ச் தோல் 100 கிராம்
18. கிச்சிலிக்கிழங்கு 100 கிராம்
இந்த பதினெட்டு விதமான
பொருட்களையும் வாங்கி சுத்தம் செய்து
மூலிகை அரவை மில்லில் கொடுத்து
பொடித்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும் பொழுது
மேல் தேய்த்து குளிக்கலாம். தேங்காய் தண்ணீர் / தேன் / கற்றாழை ஜெல்/
பன்னீர் போன்ற பொருட்களுடன் கலந்து
பேசியல் க்ரீமாகவும் பயன்படுத்தலாம். ஆண், பெண் இருவரும்
பயன்படுத்தலாம்.!
பயன்கள்
-----------
1.உடலின் வெப்பநிலையை சீராக
வைத்துக்கொள்ளலாம்.
2. விட்டமின் D சத்தை உடல்கிரகித்துக் கொள்வதற்கான
மெலனின் படலத்தை பாதுகாக்கலாம்.
3.உடல் , முக நிறத்தை
மேம்படுத்தலாம்.
4.கரும்புள்ளி, தேமல், உடல் ஊறல்,
வியர்வை நாற்றம் போன்ற குறைபாடுகளை
சீராக்கலாம்.
5. இளமையான தோற்றத்தை பெறலாம்.
6.உற்சாக மன நிலையை
பெறலாம்.
7.உடல் எடையை சீரான
நிலையில் வைத்துக்கொள்ளலாம்.
என்னங்க பாக்குறீங்க? குளியல்பொடியை
போட்டா எப்படி உடல் சீரான
எடையில் இருக்கும்னுதானே.! இப்ப சொல்றேன். சோப்பை
பயன்படுத்த பயன்படுத்த வியர்வை சுரபிகள் அடைந்துகொள்ளும்
அதனால் உடலில் வியர்வை முழுதாக
வெளியேறாமல் எடை சீராக இருக்காது.
குளியல் பொடியை பயன்படுத்தும் போது
வியர்வை சுரபிகள் திறந்துகொள்ளும் அதனால் உடலில் தேங்கியுள்ள
கழிவுகள் வியர்வை மூலம் எளிதாக
வெளியேறும். இதன் மூலம் பிரபஞ்ச
ஆற்றல்களையும் உடல் எளிதாக கிரகித்துக்
கொள்ளும். உள்ளுறுப்புகளின் இயங்குதிறனும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு திறன்
அதிகரிக்கும். உடலும் சரியான எடையில்
இருக்கும். அதுமட்டுமின்றி சோப்பை பயன்படுத்தாதவர்களுக்கு தோல்நோய்கள், வெட்டுக்காயங்கள்
புண்கள் வந்தால் உடனே எளிதாக
ஆறிவிடும். இந்த குளியல் பொடியை
ஒருமுறை பயன்படுத்தினால் கூட அதன் பயனை
உடனே தெரிந்துகொள்ளலாம். நமது மூலிகை பொருட்களில்
எப்பொழுதும் பிறர் விரும்பிவாங்கும் பொருட்களில்
இதுவும் ஒன்று.! இதை தயாரித்து
துளியும் நறுமண திரவங்களை கலக்காமல்
பல ஆண்டுகள் வைத்திருக்கலாம். கடைகளில் கிடைக்கும் அத்தனை குளியல் பொடி,
சீகக்காய் பொடிகளில் மணத்திற்காக கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது.
0 Comments